இந்திய ராணுவத்தின் கீழ் செயல்பட்டு வரும் இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் (டிஆர்டிஓ) காலியாக உள்ள 1817 எம்டிஎஸ் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ரூ.56 ஆயிரம் ஊதியம் வழங்கப்பட உள்ள இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டிஆர்டிஓ)
மொத்த காலிப் பணியிடங்கள் : 1817
பணி மற்றும் காலிப் பணியிட விவரம்:
Multi Tasking Staff (MTS)
கல்வித் தகுதி :
23.01.2020 தேதியின்படி பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஐடிஐ தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு : 23.01.2020 தேதியின்படி 18 முதல் 25 வயதிற்கு உட்பட்டவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம். அரசு விதிமுறைப்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
ஊதியம் : மாதம் ரூ.18,000 முதல் ரூ.56,900 வரையில்
தேர்வு முறை : கணினி வழி எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம் : விண்ணப்பக்கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். ஆன்லைன் வழியாக இக்கட்டணத்தைச் செலுத்தலாம்.
விண்ணப்பிக்கும் முறை : தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://www.drdo.gov.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டு.
விண்ணப்பிக்க வேண்டிய நாட்கள் : டிசம்பர் 23 ஆம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 23.01.2020 தேதிக்குள் விண்ணப்பிக்கவும்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://www.davp.nic.in/WriteReadData/ADS/eng_10301_121_1920b.pdf என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












