ஐடிஐ படிப்பு படித்தவர்களுக்கு மத்திய அரசு நிறுவனமான பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் எனப்படும் டிஆர்டிஓ(DRDO) நிறுவனத்தில் அப்ரென்டிஸ் (Apprentices ) பணியிடங்கள் காத்திருக்கின்றன. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்தப் பணிகளுக்கு விண்ணப்பித்து பயனடையலாம். மேலும் விவரங்களுக்கு https://drdo.gov.in/sites/default/files/career-vacancy-documents/advtApprenticeshipDRDL12012024.pdf என்ற இணையதள லிங்க்கைக் கிளிக் செய்து அறிந்துகொள்ளலாம்.இந்த பெருமைவாய்ந்த டிஆர்டிஓ நிறுவனத்தில்தான் தற்போது அப்ரென்டிஸ் பணியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வந்துள்ளது.
ஐடிஐ அப்ரென்டிஸ் (ITI Apprentices) பணிக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்ரென்டிஸ் (Apprentices) பணியிடங்களுக்கான கல்வி தகுதி:
அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் ITI தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
அப்ரென்டிஸ் (Apprentices) பணியிடங்களுக்கான வயது வரம்பு:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடலாம்.
அப்ரென்டிஸ் (Apprentices) பணியிடங்களுக்கான ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு DRDO-ன் நிபந்தனைகளின்படி மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்படும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 29.01.2024ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இணையதள முகவரி:மேலும் விவரங்களுக்கு https://drdo.gov.in/sites/default/files/career-vacancy-documents/advtApprenticeshipDRDL12012024.pdf என்ற இணையதள லிங்க்கைக் கிளிக் செய்து அறிந்துகொள்ளலாம்.


Click it and Unblock the Notifications












