மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் டிஆர்டிஓ (மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம்) அமைப்புக்குச் சொந்தமான டிஎம்எஸ்ஆர்டிஇ (DMSRDE) நிறுவனத்தில் ரிசர்ச் அசோசியேட் ஷிப், ஜூனியர் ரிசர்ச் பெல்லோஷிப் பணியிடங்கள் (Research Associateship, Junior Research Fellowship) காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை அனுப்பலாம். கூடுதல் விவரங்களுக்கு https://drdo.gov.in/sites/default/files/career-vacancy-documents/advtDMSRDE21122023.pdf என்ற இணையதள லிங்க்கைக் கிளிக் செய்து அறியலாம்.
மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு (Defense Research and Development Organisation, டி. ஆர். டி. ஓ) என்பது ஆசியாவின் மிகப் பெரிய விண்வெளித்தொழில் துறை மற்றும் ஆயுதம் உற்பத்தியாளர்களுள் முன்னனி நிறுவனங்களுள் ஒன்று ஆகும். இதன் தலைமையிடம் இந்தியாவின் தலைநகரமான புது டெல்லியில் அமைந்துள்ளது.
இது 1958இல் நிறுவப்பட்டது. இதற்கு இந்தியா முழுவதும் 51 கிளைகள் அல்லது அலுவலகங்கள் உள்ளன. இது பாதுகாப்பை சார்ந்த எல்லா துறைகளிளும் உள்ளது. உதாரணமாக விமானவியல், தளவாடங்கள், மின்னணுவியல் மற்றும் கணினியியல், மனித வள மேம்பாடு, வாழ்வியல், மூலப்பொருள்கள், ஏவுகணை, கவச தாங்கி போன்ற பல ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறது.
இவ்வமைப்பில் 5000 ஆராய்ச்சியாளர்கள் மற்றும் 25,000 ஊழியர்கள் பணியில் உள்ளனர். இந்நிறுவனம் 1958 இல் பாதுகாப்பு அறிவியல் அமைப்பினையும் மற்றும் வேறு சில தொழில்நுட்ப அமைப்புகளையும் ஒன்றிணைத்து உருவாக்கப்பட்டது ஆகும்.

இந்த டிஆர்டிஓ அமைப்பின் கீழ்தான் DMSRDE என்று அழைக்கப்படும் பாதுகாப்புப் பொருட்கள் கிடங்குகள் மேம்பாட்டு ஆய்வகம் (Defence Materials and Stores Research and Development Establishment) நிறுவனம் உள்ளது. இந்த ஆய்வகம் உத்தரபிரதேச மாநிலத்தில் கான்பூரில் தபால் நிலையத்தின் அருகாமையில் கிராண்ட் ட்ரன்க் சாலையில் அமைந்துள்ளது.
இந்திய ராணுவத்திற்குத் தேவைப்படும் பொருட்களை ஆராய்ச்சிகள் மூலம் மேம்படுத்தி வழங்குவதற்காக இந்த ஆய்வகம் செயல்படுகிறது. அவற்றில் ராணுவத்தினருக்குத் தேவையான பாதுகாப்பு ஆடைகள், பாதுகாப்பு அணிகலன்கள், பாதுகாப்புக் கருவிகள் ஆகியவையும் அடங்கும்.
இந்த பெருமைவாய்ந்த டிஆர்டிஓ (மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம்) அமைப்புக்குச் சொந்தமான டிஎம்எஸ்ஆர்டிஇ (DMSRDE) நிறுவனத்தில்தான் தற்போது ரிசர்ச் அசோசியேட் ஷிப், ஜூனியர் ரிசர்ச் பெல்லோஷிப் பணியிடங்கள் (Research Associateship, Junior Research Fellowship) காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரிசர்ச் அசோசியேட் ஷிப், ஜூனியர் ரிசர்ச் பெல்லோஷிப் பணியிடங்களுக்கான கல்வித்தகுதி
ரிசர்ச் அசோசியேட் ஷிப், ஜூனியர் ரிசர்ச் பெல்லோஷிப் பணியிடங்களுக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த துறைகளில் பி.இ., பி.டெக். எம்.இ, எம்.டெக், பிஎச்.டி (BE, B.Tech, ME, M.Tech, Ph.D Degree) தேர்ச்சி பெற்றவர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.
ரிசர்ச் அசோசியேட் ஷிப், ஜூனியர் ரிசர்ச் பெல்லோஷிப் பணியிடங்களுக்கான வயதுத்தகுதி:
24.01.2024 அன்றைய நாளின் படி, விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது வரம்பானது Research Associateship பணிக்கு 35 வயது எனவும், Junior Research Fellowship பணிக்கு 28 வயது என்றும் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.
ரிசர்ச் அசோசியேட் ஷிப், ஜூனியர் ரிசர்ச் பெல்லோஷிப் பணியிடங்களுக்கான மாத சம்பளம்:
இப்பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் தகுதியான நபர்கள் ரூ.37,000/- முதல் ரூ.67,000/- வரை மாத சம்பளமாக பெறுவர்.
தேர்வு செய்யும் விதம்:
இந்தப் பணிகளுக்கு பொருத்தமான நபர்கள் வரும் ஜனவரி 24-ம் தேதியன்று (24.01.2024) காலை 9.00 மணிக்கு அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் நடைபெறவுள்ள நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் விதம்:
இந்த மத்திய அரசுப் பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து நேர்காணலுக்கு வரும் போது நேரில் சமர்ப்பிக்க வேண்டும்.
கூடுதல் விவரங்களுக்கு https://drdo.gov.in/sites/default/files/career-vacancy-documents/advtDMSRDE21122023.pdf என்ற இணையதள லிங்க்கைக் கிளிக் செய்து அறியலாம்.


Click it and Unblock the Notifications












