பி.இ, பி.டெக் பட்டதாரியா ? ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் மத்திய DRDO நிறுவனத்தில் வேலை!

இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்திற்கு உட்பட்ட பாதுகாப்பு உயிரியல் பொறியியல் மற்றும் மின் மருத்துவ ஆய்வகத்தில் (DEBEL) காலியாக உள்ள Junior Research Fellow பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெள

இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்திற்கு உட்பட்ட பாதுகாப்பு உயிரியல் பொறியியல் மற்றும் மின் மருத்துவ ஆய்வகத்தில் (DEBEL) காலியாக உள்ள Junior Research Fellow பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 11 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.31 ஆயிரம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

பி.இ, பி.டெக் பட்டதாரியா ? ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் மத்திய DRDO நிறுவனத்தில் வேலை!

நிர்வாகம் : பாதுகாப்பு உயிரியல் பொறியியல் மற்றும் மின் மருத்துவ ஆய்வகம் (DEBEL)

மேலாண்மை : மத்திய அரசு

மொத்த காலிப் பணியிடங்கள் : 11

பணி : Junior Research Fellow

கல்வித் தகுதி :

அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் பணிக்கு தொடர்புடைய பிரிவில் Mechanical, Biomedical, Chemistry, Chemical, Textile, Polymer Science, Fibre Science போன்ற பாடப்பிரிவில் B.E, B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : விண்ணப்பதாரர் 28 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.31,000 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தினைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.davp.nic.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை காணவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
DRDO DEBEL Recruitment 2022 : Application invited for Junior Research Fellow (JRF) Posts
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X