NMMS Scholarship 2022-2023 Notification
தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித் தொகை திட்ட தேர்வுக்கு, பள்ளி மாணவர்களின் விவரங்களை ஜனவரி 20 ஆம் தேதிக்குள் ஆன்லைன் வாயிலாக பதிவேற்றம் செய்ய வேண்டும் என, அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.
அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு, அரசுத் தேர்வுகள் இயக்கக இயக்குனர் சேதுராம வர்மா வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது

என்.எம்.எம்.எஸ்., உதவித்தொகை
2022- 2023ஆம் ஆண்டிற்கான தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவி தொகை திட்டத் தேர்வு 25.02.2023 சனிக்கிழமை நடைபெற உள்ளது. இத்தேர்விற்கு விண்ணப்பிக்க விரும்பும் எட்டாம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவர்கள் இணையதளம் வாயிலாக விண்ணப்பப் படிவங்களை 26.12.2022 முதல் 20.01.2023 வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
ப்ளீஸ் மறக்காதீங்க...!
தோ்விற்கு விண்ணப்பித்த எட்டாம் வகுப்பு பள்ளி மாணவர்களின் விவரங்களை சம்பந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியர்கள் https://dge1.tn.gov.in என்ற வலைதள முகவரி வாயிலாக சமர்ப்பிக்க வேண்டும்.
பதிவேற்றம்
* கடந்த ஆண்டை போல இந்த வருடமும் 'எமிஸ்' அடிப்படையில் மாணவர்களின் பதிவு நடைபெறவுள்ளது. எனவே, பள்ளிகளுக்கான பதிவு எண், பாஸ்வேர்டைப் பயன்படுத்தி மாணவர்களின் எமிஸ் எண்ணினை பதிவு செய்தவுடன் விவரங்கள் உடனடியாக திரையில் தோன்றும்.
* அவ்விவரங்களில் ஏதேனும் திருத்தங்கள் இருப்பின், திருத்தங்களை மேற்கொள்ளவும், விடுபட்டுள்ள விவரங்களையும், புகைப்படத்தையும் பதிவேற்றம் செய்தால் போதுமானதாகும்.
* NMMSS தேர்வுக்கு மாணவர்கள் சமர்ப்பித்த விண்ணப்பத்தின் அடிப்படையில், (மாணவரின் பெயர் பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் எவ்வாறு இடம் பெற வேண்டுமோ அதன்படி) EMIS இணையதளத்தில் திருத்தங்களை மேற்கொண்டு, அதன் பின்னர் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
நோட் இட் ப்ளீஸ்...!
* மாணவர் பெயா், தந்தை / பாதுகாவலர் பெயர், பிறந்த தேதி, பாலினம், கைபேசி எண் போன்ற விவரங்கள் EMIS இணையதளத்தில் உள்ள விவரங்களுடன் ஒத்திருக்க வேண்டும்.
* மாணவரின் பெற்றோர் பயன்படுத்தும் நடைமுறையில் உள்ள கைபேசி எண்ணையே அளிக்க வேண்டும். உதவித் தொகை சார்ந்து அவ்வப்போது குறுஞ்செய்தி அல்லது கடவுச்சொல் விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணிற்கே அனுப்பப்படும் என்பதால், அக்கைபேசி எண்ணை குறைந்தது தொடரும் ஐந்து ஆண்டுகளுக்கு மாற்றாமல் இருக்க வேண்டும்.
* தேர்வர்கள் விண்ணப்பத்தில் பூர்த்தி செய்துள்ள விவரங்கள் சரிதானா என்பதனை பள்ளி ஆவணங்களை ஒப்பிட்டு சரிபார்த்த பின்னரே பதிவேற்றம் செய்ய வேண்டும்.
* மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டையினை மாணவர்களிடமிருந்து பெற்று இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.
* பள்ளி முகவரி என்ற இடத்தில் பள்ளியின் பெயா், முகவரியினை அஞ்சல் குறியீட்டுடன் பதிவு செய்யப்படவேண்டும்.
* வீட்டு முகவரி என்ற இடத்தில் பள்ளியின் பெயர் மற்றும் முகவரியினை பதியக்கூடாது. தேர்வரின் வீட்டு முகவரி மட்டுமே பதியப்படவேண்டும்.
* பெற்றோரின் தொலைபேசி/கைபேசி என்ற காலத்திலும் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் தொலைபேசி/கைபேசி எண்ணையே பதிவிட வேண்டும்.
* பள்ளியின் தொலைபேசி என்ற இடத்தில் மட்டும் பள்ளியின் தொலைபேசி எண்ணினை பதிவு செய்ய வேண்டும்.
* பதிவு செய்த விவரங்களை s Declaration form Print out கொண்டு சரியான முறையில் பதிவு செய்யப்பட்டுள்ளதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
* பதிவேற்றம் செய்த விவரங்களில் மாற்றம் ஏதேனும் இருப்பின் தேர்வுக் கட்டணத்தினை ஆன்லைனில் செலுத்துவற்குள் சரிசெய்து கொள்ள வேண்டும்.
* தேர்வுக் கட்டணம் செலுத்திய பின் எந்த பதிவுகளும் கண்டிப்பாக மாற்ற இயலாது.
* தேர்விற்கான தேர்வுக் கட்டணம் ரூ.50/- வீதம் DGE PORTAL-ல் Online-ல் அனைத்து விண்ணப்பங்களும் பதிவேற்றம் செய்த பிறகு தேர்வு கட்டணத்தை செலுத்த வேண்டும்.
* தேர்வுக் கட்டணத்தினை செலுத்த இறுதி நாள் 24.01.2023 மாலை 06.00 மணி.
* பதிவேற்றம் முடிந்தவுடன் ஒரு தேர்வருக்கு ரூ.50/- வீதம் விண்ணப்பித்த தேர்வர்களின் விவரப்பட்டியலினை சம்பந்தப்பட்ட மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலர்களிடம் 01.02.2023 க்குள் ஒப்படைக்க வேண்டும்.
விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யும் காலம்: 09.01.2023 - 25.01.2023
விண்ணப்பங்களைப் பதிவேற்றம் செய்ய கடைசி நாள் : 25.01.2023
Summary Report உதவி இயக்குநர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டிய கடைசி நாள் : 01.02.2023
முழு விவரங்கள் அறிய கீழே உள்ள லிங்க்கை க்ளிக் பண்ணுங்க ப்ளீஸ்...


Click it and Unblock the Notifications












