பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவரா நீங்கள்? திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றத்தில் வேலை!

திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

By Kani

திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றத்தில் காலியாக உள்ள எக்ஸாமினர், ரீடர், டிரைவர், கம்ப்யூட்டர் ஆபரேட்டர்,ஆபிஸ் அஸிஸ்டென்ட் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் உரிய சான்றிதழ்களின் நகல்களில் அட்டெஸ்டெட் செய்து விண்ணப்பத்தை அஞ்சல் மூலம் குறிப்பிட்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றத்தில் வேலை!

காலி பணியிடங்கள்: 90

வயது வரம்பு: 18 முதல் 32 வரை (வயது வரம்பில் தளர்வு உண்டு)

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய கடைசி தேதி: 28.05.2018 ஆம் தேதி மாலை 5.45க்குள்

விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பங்கள் வரையறுக்கப்பட்ட படிவத்தில் பூர்த்தி செய்யப்பட்டு, தபால் மூலமாக மட்டுமே அனுப்பப்பட வேண்டும். ஒரு விண்ணப்பதாரர் ஒரு பதவிக்கு ஒரு விண்ணப்பம் மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும். அனைத்து சான்றிதழ்களின் நகல்களிலும் சுய சான்றொப்பம் செய்து விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

முதன்மை மாவட்ட நீதிபதி,

முதன்மை மாவட்ட நீதிமன்றம்,

V.N.வளாகம், கலெக்டர் ஆபிஸ் அருகில்,

திண்டுக்கல்.

குறிப்பு: காலதாமதமாக வரும் விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் பரிசீலிக்கப்படமாட்டாது.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Dindigul District Court invites application for 90 Office Assistants Posts
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+