தமிழக அரசின் கீழ் தருமபுரி மாவட்ட சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையில் காலியாக உள்ள Hospital Quality Manage, Driver Mobile Medical Unit பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 14 பணியிடங்கள் உள்ள நிலையில் இதற்கு ரூ.60 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : தருமபுரி மாவட்ட சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை
மேலாண்மை : தமிழக அரசு
பணி : Hospital Quality Manage, Driver Mobile Medical Unit, Cleaner Mobile Medical Unit, Hospital Worker (UPHC), Sanitary Worker (UPHC), Palliative care Hospital Worke, Attender cum Cleaner Labour MHC, Lab Technician உள்ளிட்ட பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
மொத்த காலிப் பணியிடங்கள் : 14
கல்வித் தகுதி :
அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் MBBS, Dental, AYUSH அல்லது Nursing, Social Science, Life Science Graduates-with Master Health Administration, Hospital Management, Public Health, 8ம் வகுப்புக்கு தேர்ச்சி, 10ம் வகுப்பு தேர்ச்சி, CMLT/DML என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊதியம் : ரூ.6,000 முதல் ரூ.60,000 மாதம்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் 27.12.2021 தேதிக்குள் அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தினைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :
நிருவாக செயலாளர், துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள்,
மாவட்ட நலவாழ்வுச் சங்கம் (District Health Society),
துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் அலுவலகம்,
தருமபுரி மாவட்டம் - 636705
தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் குறுகிய பட்டியல் மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடங்கள் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் மேலே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பினைக் காணவும்.


Click it and Unblock the Notifications












