தில்லி உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள Judicial Service தேர்விற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : தில்லி உயர்நீதிமன்றம்
தேர்வு : Delhi Higher Judicial Service Examination
காலிப் பணியிடங்கள் : 10
கல்வித் தகுதி : மேற்கண்ட தேர்விற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் குறைந்தபட்சம் 7 ஆண்டுகள் வழக்குரைஞராக பணியாற்றியிருக்க வேண்டும்.
வயது வரம்பு : 45 வயதிற்கு உட்பட்டவர்கள் இத்தேர்விற்கு விண்ணப்பிக்கலாம்.
ஊதியம் : மாதம் ரூ.1,31,100 முதல் ரூ.2,16,600 வரையில்
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.delhihighcort.nic.in என்னும் இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம் : இத்தேர்விற்கு விண்ணப்பக் கட்டணமாக ரூ.1000 செலுத்த வேண்டும். இதனை ஆன்லைன் வழியாக செலுத்த வேண்டும்.
தேர்வு முறை : தில்லி உயர்நீதிமன்றத்தால் நடத்தப்படும் முதல்நிலைத் தேர்வு மற்றும் முதன்மைத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 21.01.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.delhihighcort.nic.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது இங்கே கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












