மத்திய அரசிற்கு உட்பட்ட அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின்கீழ் செயல்பட்டு வரும் பயோடெக்னாலஜி துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தற்போது வெளியிடப்பட்டுள்ள இளம் தொழில் வல்லுநர்கள் பணியிடத்திற்கு பயோடெக்னாலஜி பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்க்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம்
துறை : பயோடெக்னாலஜி துறை
மேலாண்மை : மத்திய அரசு
பணி : இளம் தொழில் வல்லுநர்
மொத்த காலிப் பணியிடங்கள் : 05
ஊதியம் : மாதம் ரூ.40,000
கல்வித் தகுதி : பயோடெக்னாலஜி துறையில் எம்.எஸ்சி., அல்லது பி.டெக் முடித்துக் குறைந்தது ஓர் ஆண்டு பணி அனுபவம் பெற்றவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு : 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
தேர்வு முறை : விண்ணப்பதாரரின் கூடுதல் கல்வித்தகுதி மற்றும் பணி அனுபவத்தின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை : தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.dbtindia.gov.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 22.01.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://www.dbtindia.gov.in/whats-new/vacancies என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












