சென்னை ஆவடியில் உள்ள மத்திய அரசு நிறுவனத்தில் பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன. இங்குள்ள போர் வாகனங்கள் ஆராய்ச்சி, மேம்பாட்டு நிறுவனமான சிவிஆர்டிஇ-யில் (CVRDE) 'அப்ரென்டிஸ்' பணிக்கு அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை அனுப்பலாம். கூடுதல் விவரங்களுக்கு drdo.gov.in/drdo என்ற இணையதள முகவரியைக் கிளிக் செய்து அறியலாம்.
ஆவடியில் உள்ள போர் ஊர்தி ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனம், (சி.வி.ஆர்.டி.இ) நிறுவனம் (Combat Vehicles Research and Development Establishment (CVRDE)), பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பின் (டி.ஆர்.டி.ஒ) (Defence Research and Development Organisation (DRDO) இயங்கி வரும் ஒரு ஆய்வகமாகும். இது இந்தியாவில் சென்னையை அடுத்த ஆவடியில் சிறப்புற அமைந்துள்ளது. இந்த சிறப்புவாய்ந்த முதன்மை ஆய்வகம் கவச போர் ஊர்திகள் (Armoured fighting vehicles) மற்றும் போர்க்கருவிகள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது.

இந்த பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் (டிஆர்டிஓ) கீழ் செயல்படும் போர் ஊர்தி ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் (சிவிஆர்டிஇ) புதிய இயக்குநராக விஞ்ஞானி ஜெ ராஜேஷ்குமார் கடந்த 2023-ல் பொறுப்பேற்றுக்கொண்டார். இதுவரை சிவிஆர்டிஇ இயக்குநராக இருந்த விஞ்ஞானி வி பாலமுருகன் ஓய்வு பெற்றதையடுத்து ராஜேஷ்குமார் புதிய இயக்குநராக நியமிக்கப்பட்டார்.
இதற்கு முன்னதாக ராஜேஷ்குமார் பிரதான பீரங்கி உற்பத்திக் குழுவின் இணை இயக்குநராகவும், இலகுரக பீரங்கி திட்டத்தின் இயக்குநராகவும் பொறுப்பு வகித்துள்ளார்.
இந்தியாவில் உற்பத்தி செய்வோம் என்ற பிரதமரின் முன்முயற்சியில் இந்திய ராணுவத்திற்கு 118 அர்ஜுன் பீரங்கிகள் ஆர்டர் அதிகரிப்புக்கும் முதலாவது இலகுரக பீரங்கி வடிவமைப்புக்கும் இவர் முக்கியப்பங்கு வகித்துள்ளார். எந்திரப் பொறியியலில் இளநிலைப் பட்டம் பெற்ற இவர், பிரிட்டனில் உள்ள க்ரான் ஃபீல்டு பல்கலைக்கழகத்தின் ராணுவ அறிவியல் கல்லூரியில் ராணுவ வாகனத் தொழில்நுட்பத்தில் முதுநிலைப் பட்டம் பெற்றவர்.
இந்த சிறப்புவாய்ந்த சிவிஆர்டிஇ நிறுவனத்தில்தான் தற்போது
பிட்டர் 15, மெஷினிஸ்ட் 10, கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர் 8, எலக்ட்ரீசியன் 6, டர்னர் 5, எலக்ட்ரானிக்ஸ் 4, மெக்கானிக்கல் 4, வெல்டர் 3, மோட்டார் வெகிக்கிள் 3, கார்பென்டர் 2 என மொத்தம் 60 இடங்கள் காலியாக அமைந்து உள்ளன.
சிவிஆர்டிஇ பணியிடங்களுக்கான கல்வித்தகுதி: 2021 / 2022 / 2023-ல் தொடர்புடைய பிரிவில் ஐ.டி.ஐ., முடித்தவர்கள் மட்டுமே இந்த வேலைகளுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
சிவிஆர்டிஇ பணியிடங்களுக்கான வயதுவிவரம்: 18.4.2024 அடிப்படையில் 18 முதல் 27 வயதுக்குள் இருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை அறிவிக்கப்பட்டு உள்ளது.
தேர்ச்சி முறை: நேர்முகத்தேர்வு அடிப்படையில் ஆட்கள் இந்த வேலையிடங்களுக்குத் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் முறையில் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கவேண்டும்.
கடைசிநாள்: சிவிஆர்டிஇ பணியிடங்களுக்கு 18.4.2024-ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்பவேண்டும்.
இணையதள முகவரி: கூடுதல் விவரங்களுக்கு drdo.gov.in/drdo என்ற இணையதள முகவரியைக் கிளிக் செய்து அறியலாம்.


Click it and Unblock the Notifications












