மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் (CSIR NEERI) காலியாக உள்ள Project Associate மற்றும் Project Assistant பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 13 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.25 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம் (NEERI)
மேலாண்மை : மத்திய அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி மையம் (CSIR)
பணி : Project Associate மற்றும் Project Assistant
மொத்த காலிப் பணியிடங்கள் : 13
கல்வித் தகுதி : அரசு அனுமதி பெற்று கல்வி நிறுவனத்தில் பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பி.இ, பி.டெக், பி.எஸ்சி, எம்.எஸ்சி பட்டம் அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
- Project Associate - 35 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
- Project Assistant - 50 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
ஊதியம் : ரூ.20,000 முதல் ரூ.25,000 மாதம்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் 14.11.2021 தேதிக்குள் http://recruitment.neeri.res.in/RecruitmentV3/applicationForm.jsp எனும் இணையதளத்தின் மூலம் ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்க வேண்டும். பிறகு அதனை பதிவிறக்கம் செய்து, 19.11.2021 தேதிக்குள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு கிடைக்கும் அஞ்சல் வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : விண்ணப்பதாரர் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர். இத்தேர்வு, ஆன்லைன் வழியில் நடைபெறும்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.neeri.res.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தைக் காணவும்.


Click it and Unblock the Notifications












