மத்திய அரசு நிறுவனமான சிஎஸ்ஐஆர்-நேஷனல் ஜியாகிராபிக்கல் ரிசர்ச் இன்ஸ்டிடியூட்டில் (CSIR-National Geophysical Research Institute) ஜூனியர் செக்ரட்ரியேட் அசிஸ்டெண்ட் (Junior Secretariat Assistant) பணியிடங்கள் காலியாக உள்ளன. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
கூடுதல் விவரங்களுக்கு https://www.ngri.res.in/upload/uploadfiles/files/JSA_Advertisement_4_2023.pdf என்ற இணையதள லிங்க்கைக் கிளிக் செய்து அறிந்துகொள்ளலாம்.
சிறப்பு வாய்ந்த இந்த சிஎஸ்ஐஆர்-நேஷனல் ஜியாகிராபிக்கல் ரிசர்ச் இன்ஸ்டிடியூட்டில் தான்(CSIR-National Geophysical Research Institute) தற்போது ஜூனியர் செக்ரட்ரியேட் அசிஸ்டெண்ட் (Junior Secretariat Assistant) பணியிடங்கள் காலியாக உள்ளன.
ஜூனியர் செக்ரட்ரியேட் அசிஸ்டெண்ட் (Junior Secretariat Assistant) பணியிடங்களுக்கான கல்வி தகுதி:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூனியர் செக்ரட்ரியேட் அசிஸ்டெண்ட் (Junior Secretariat Assistant) பணியிடங்களுக்கான வயது வரம்பு:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 28 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயதுச் சலுகை போன்ற விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடலாம்.
ஊதிய விவரம்:
தேர்வாகும் தகுதியானவர்களுக்கு 7-வது சிபிசி பே மேட்ரிக்ஸ் லெவல்-02 (7th CPC Pay Matrix Level - 02) அடிப்படையில் [Rs. 19900- Rs. 63200] ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்படும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு, திறனறித் தேர்வு (Written test / Skill test) மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 26.01.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.
இணையதள முகவரி:
கூடுதல் விவரங்களுக்கு https://www.ngri.res.in/upload/uploadfiles/files/JSA_Advertisement_4_2023.pdf என்ற இணையதள லிங்க்கைக் கிளிக் செய்து அறிந்துகொள்ளலாம்.


Click it and Unblock the Notifications












