மத்திய அரசிற்கு உட்பட்ட மத்திய அறிவியல் மற்றும் தொழித்துறை ஆராய்ச்சி நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் கனிமங்கள் மற்றும் பொருட்கள் தொழில்நுட்ப நிறுவனத்தில் (CSIR IMMT) காலியாக உள்ள விஞ்ஞானி, மூத்த விஞ்ஞானி உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்த 15 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.2.16 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : கனிமங்கள் மற்றும் பொருட்கள் தொழில்நுட்ப நிறுவனம் (CSIR IMMT)
மேலாண்மை : மத்திய அரசு
மொத்த காலிப் பணியிடம் : 15
பணி மற்றும் காலிப் பணியிடங்கள்:
- Scientist - 10
- Senior Scientist - 02
- Principal Scientist - 02
- Sr. Principal Scientist - 01
கல்வித் தகுதி : மேற்கண்ட பணியிடத்திற்கு சம்பந்தப்பட்ட துறையில் எம்.இ, எம்.டெக், பி.எச்டி இவற்றில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும், விண்ணப்பதாரர் கேட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
- விண்ணப்பதாரர் 32 முதல் 50 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
- அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
ஊதியம் : ரூ.67,700 முதல் ரூ.2,16,600 வரையில் மாத ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை :
மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://www.immt.res.in/ எனும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் 17.05.2021 தேதிக்குள் ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 17.05.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம் :
- பொது விண்ணப்பதாரர்களுக்கு ரூ.100
- எஸ்.சி, எஸ்.டி, பிற்படுத்தப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் இல்லை.
தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப்படிவத்தினைப் பெறவும் https://www.immt.res.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












