தமிழகத்தில் செயல்பட்டு வரும் மத்திய மின் இரசாயன ஆராய்ச்சி நிறுவனத்தில் (CSIR CECRI) காலியாக உள்ள Junior Secretariat Assistant, Junior stenographer உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 14 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.50 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : மத்திய மின் இரசாயன ஆராய்ச்சி நிறுவனம் (CSIR CECRI)
மேலாண்மை : மத்திய அரசு
மொத்த காலிப் பணியிடம் : 14
பணி : Junior Secretariat Assistant, Junior stenographer மற்றும் Receptionist பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
கல்வித் தகுதி :
அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் 10, 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், ஏதேனும் ஓர் துறையில் பட்டம் பெற்றவர்கள், பணிக்கு தொடர்புடைய பிரிவில் குறைந்தது 2 வருடம் முன் அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு :
விண்ணப்பதாரர் 14.02.2022 தேதியின்படி 28 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
அரசு விதிமுறைகளின் படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரருக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
ஊதியம் :
- Junior Secretariat Assistant - ரூ.28,415
- Junior stenographer - ரூ.37,239
- Receptionist - ரூ.50,802
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://jsarecruit.cecri.res.in/ அல்லது அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தினைப் பெற்று, பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 14.02.2022 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம் : ரூ.500 கட்டணமாக செலுத்த வேண்டும்.
மேலும், விண்ணப்பதாரர் CSIR பணியாளராக இருப்பின் கட்டணம் செலுத்தத் தேவையில்லை.
தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://jsarecruit.cecri.res.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












