மத்திய அரசின் கீழ் செயல்படும் கவுன்சில் ஆஃப் சயின்ஸ் அன்ட் இன்டஸ்டிரியல் ரிசர்ச் (சி.எஸ்.ஐ.ஆர்) நிறுவனத்தில் உள்ள காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு csir4pi.res.in என்ற இணையதள முகவரியைக் கிளிக் செய்து அறியலாம்.
இந்தச் சிறப்புவாய்ந்த கவுன்சில் ஆஃப் சயின்ஸ் அன்ட் இன்டஸ்டிரியல் ரிசர்ச் (சி.எஸ்.ஐ.ஆர்) நிறுவனத்தில்தான் தற்போது பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.
சிஎஸ்ஐஆர் நிறுவனத்தில் தற்போது டெக்னிக்கல் அசிஸ்டென்ட் 15, டெக்னீசியன் 1, டிரைவர் 1 என மொத்தம் 17 காலி இடங்கள் உள்ளன.
சிஎஸ்ஐஆர் நிறுவன பணியிடங்களுக்கான கல்வித்தகுதி: சிவில், எலக்ட்ரானிக்ஸ், ஐ.டி., கம்ப்யூட்டர், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் பிரிவில் டிப்ளமோ / டிகிரி முடித்திருக்க வேண்டும்.
சிஎஸ்ஐஆர் நிறுவன பணியிடங்களுக்கான வயதுத்தகுதி: 29.2.2024 அடிப்படையில் டிரைவர் 27, மற்ற பணிக்கு 28 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை அறிவிக்கப்பட்டு உள்ளது.

தேர்ச்சி முறை:
சிஎஸ்ஐஆர் நிறுவன பணியிடங்களுக்கு எழுத்துத்தேர்வு, ஸ்கில் தேர்வு முறையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: சிஎஸ்ஐஆர் நிறுவன பணியிடங்களுக்கு ஆன்லைன் முறையில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக்கட்டணம்:
சிஎஸ்ஐஆர் நிறுவன பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ரூ. 500 செலுத்தவேண்டும். எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினர் கட்டணம் செலுத்தத் தேவை இல்லை.
கடைசிநாள்:
சிஎஸ்ஐஆர் நிறுவன பணியிடங்களுக்கு 29.2.2024-ம் தேதிக்குள் விண்ணப்பம் செய்யவேண்டும்.
இணையதள முகவரி:
கூடுதல் விவரங்களுக்கு csir4pi.res.in என்ற இணையதள முகவரியைக் கிளிக் செய்து அறியலாம்.


Click it and Unblock the Notifications












