சென்னை பெட்ரோலியம் நிறுவனத்தில் (சி.பி.சி.எல்.,) காலியாக உள்ள பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை அனுப்பலாம். கூடுதல் விவரங்களுக்கு cpcl.co.in என்ற இணையதள முகவரியைக் கிளிக் செய்து பெறலாம்.
இந்தச் சிறப்பு வாய்ந்த சென்னை பெட்ரோலியம் நிறுவனத்தில்தான் (சி.பி.சி.எல்) தற்போது பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது
தற்போது இங்கு ஜூனியர் குவாலிட்டி கன்ட்ரோல் 3, ஜூனியர் டெக்னீசியன் அசிஸ்டென்ட் (உணவு பாதுகாப்பு) 7, ஜூனியர் இன்ஜினியர் அசிஸ்டென்ட் பிரிவில் உற்பத்தி 32, மெக்கானிக் 12, எலக்ட்ரிக்கல் 5,
இன்ஸ்ட்ரூமென்டேசன் 5, மெக்கானிக் 2, எலக்ட்ரிக்கல் 2 உட்பட மொத்தம் 73 இடங்கள் காலியாக அமைந்து உள்ளன.

சென்னை பெட்ரோலியம் நிறுவன பணியிடங்களுக்கான கல்வித்தகுதி
இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தொடர்புடைய பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
சென்னை பெட்ரோலியம் நிறுவன பணியிடங்களுக்கான வயது விவரம்:
இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 1.2.2024 அடிப்படையில் 18 - 26, 18 - 30 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை அறிவிக்கப்பட்டு உள்ளது.
தேர்ச்சி முறை:
சென்னை பெட்ரோலியம் நிறுவன பணியிடங்களுக்கு ஆன்லைன் தேர்வு, ஸ்கில் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவற்றின் முறைகளில் ஆட்சேர்ப்பு நடைபெறும்.
விண்ணப்பிக்கும் முறை:
சென்னை பெட்ரோலியம் நிறுவன பணியிடங்களுக்கு ஆன்லைன் முறையில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக்கட்டணம்:
சென்னை பெட்ரோலியம் நிறுவன பணியிடங்களுக்கு ரூ. 500 விண்ணப்பக் கட்டணம் செலுத்தவேண்டும். பெண்கள் / எஸ்.சி.,/ எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் செலுத்தத் தேவையில்லை.
கடைசிநாள்: சென்னை பெட்ரோலியம் நிறுவன பணியிடங்களுக்கு 26.2.2024-ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்பித் தரவேண்டும்.
இணையதள முகவரி:
கூடுதல் விவரங்களுக்கு cpcl.co.in என்ற இணையதள முகவரியைக் கிளிக் செய்து பெறலாம்.


Click it and Unblock the Notifications












