சென்னை மத்திய தோல் ஆராய்ச்சி மையம் (சிஎல்ஆர்ஐ)-யில் காலியாக உள்ள இளம்நிலை செயலக உதவியாளர் மற்றும் தொழில்நுட்பவியலாளர் பணியிடங்களை நிரப்பும் வகையில் விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணியிடங்களுக்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

காலிப் பணியிடம் மொத்தம் : 10
பணி மற்றும் பணியிடம்:
- இளநிலை செயலக உதவியாளர் : 02
- தொழில்நுட்பவியலாளர் : 08
கல்வித் தகுதி :
- இளநிலை செயலக உதவியாளர் : 12-வது தேர்ச்சி
- தொழில்நுட்பவியலாளர் : 10-வது தேர்ச்சி, ஐடிஐ
வயது வரம்பு : 28 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.
ஊதியம் : ரூ. 19,900
தேர்வு முறை :-
- இளநிலை செயலக உதவியாளர் : எழுத்துத் தேர்வு மற்றும் திறமை தேர்வு
- தொழில்நுட்பவியலாளர் : வர்த்தகத் தேர்வு மற்றும் எழுத்துத் தேர்வு
விண்ணப்பிக்கும் முறை:-
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.clri.org என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை அஞ்சல் வழியாக அனுப்பி வைக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:-
Section Officer E.I,
CSIR- Central Leather Research Institute,
Sardar Patel Road, Adyar,
Chennai-600 020.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 2018 நவம்பர் 05
விண்ணப்பக் கட்டணம் :
- பொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்கள் : ரூ. 100
- இதர விண்ணப்பதாரர்களுக்கு : கட்டணம் இல்லை
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.clri.org/ என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்.


Click it and Unblock the Notifications












