ரூ.40 ஆயிரம் மாத சம்பளத்தில் மத்திய அரசு வேலை...!!!

மத்திய அரசு நிறுவனமான சிப்பெட்டில் (CIPET) தற்போது புராஜக்ட் மேனேஜர், புராஜக்ட் அசிஸ்டெண்ட் (Project Manager, Project Assistant) ஆகிய பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை அனுப்பலாம். கூடுதல் விவரங்களுக்கு https://www.cipet.gov.in/job-opportunities/contractual_positions.php என்ற இணையதள முகவரியைக் கிளிக் செய்து அறியலாம். இப்பணிகளுக்கு தகுதியான நபர்களுக்கு ரூ.40,000/- ஊதியமாக வழங்கப்படும்.

சிப்பெட் என்று சுருக்கமாக அழைக்கப்படும் மத்திய பிளாஸ்டிக் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கழகம் (CIPET அல்லது Central Institute of Plastics Engineering and Technology) மத்திய அரசின், வேதியல் மற்றும் உரங்களுக்கான அமைச்சகத்தின், வேதியல் மற்றும் பெட்ரோலிய வேதியல் துறையின் கீழ் தன்னாட்சி பெற்ற தொழில் நுட்பக் கழகமாக சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது.

1968-ஆம் ஆண்டில் துவக்கப்பட்ட மத்திய பிளாஸ்டிக் பொறியில் மற்றும் தொழில்நுட்பக் கழகத்தின் தலைமையகம் (CIPET) தமிழ்நாடு மாநிலம் சென்னையில் அமைந்துள்ளது. அகமதாபாத், அமிர்தசரச்ஸ், அவுரங்காபாத், போபால், புவனேசுவரம், சென்னை, கவுஹாத்தி, ஹைதராபாத், ஹாஜிப்பூர், ஹால்டியா, இம்பால், ஜெய்ப்பூர், கொச்சி, லக்னோ, மைசூர், பானிபட் ஆகிய இடங்களில் மத்திய பிளாஸ்டிக் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கழகத்தின் மையங்கள் செயல்படுகின்றன. அனைத்து மையங்களிலும் உயர்தர பரிசோதனை கூடங்களுடன் கூடிய பிளாஸ்டிக் மற்றும் பாலிமர் தொழில் சார்ந்த தொழில் நுட்பக் கல்வியும், ஆராய்ச்சிப் படிப்புகளும் உள்ளன.

ரூ.40 ஆயிரம் மாத சம்பளத்தில் மத்திய அரசு வேலை...!!!

பிளாஸ்டிக் தொழில்நுட்பக் கல்வி தொடர்பான மூன்றாண்டு பட்டயப் படிப்புகள், நான்காண்டு இளநிலை தொழில் நுட்ப படிப்புகள், இரண்டாண்டு முதுநிலை தொழில்நுட்ப படிப்புகள் மற்றும் ஆய்வுப் படிப்புகளை சிப்பெட் வழங்குகிறது.

இந்த பெருமைவாய்ந்த சிப்பெட் நிறுவனத்தில்தான் தற்போது புராஜக்ட் மேனேஜர், புராஜக்ட் அசிஸ்டெண்ட் (Project Manager, Project Assistant) ஆகிய பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

சிப்பெட் நிறுவனப் பணியிடங்களுக்கான கல்வித்தகுதி விவரம்:

இந்தப் பணியிடங்களுக்கு அரசு அல்லது அரசு சார்ந்த பொறியியல் கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த துறைகளில் பி.டெக், எம்.டெக் (B.Tech, M.Tech) பட்டம் பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

சிப்பெட் நிறுவனப் பணியிடங்களுக்கான வயதுத்தகுதி விவரம்:

Project Manager பணிக்கு 35 வயது எனவும், Project Assistant பணிக்கு 30 வயது எனவும் அதிகபட்ச வயது வரம்பானது நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சிப்பெட் நிறுவனப் பணியிடங்களுக்கான சம்பள விவரம்:

Project Manager பணிக்கு ரூ.40,000/- என்றும், Project Assistant பணிக்கு ரூ.25,000/- என்றும் மாத சம்பளமாக வழங்கப்படும் என்றும் சிப்பெட் அறிவித்துள்ளது.

சிப்பெட் நிறுவனப் பணியிடங்களுக்கான தேர்வு செய்யும் முறை:

இப்பணிகளுக்கு தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிகிறது.

சிப்பெட் நிறுவனப் பணியிடங்களுக்கான விண்ணப்பிக்கும் வழிமுறை

விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு மற்றும் மின்னஞ்சல் முகவரிக்கு வரும் 29-ம் தேதிக்குள் (29.12.2023) அனுப்ப வேண்டும்.
கூடுதல் விவரங்களுக்கு https://www.cipet.gov.in/job-opportunities/contractual_positions.php என்ற இணையதள முகவரியைக் கிளிக் செய்து அறியலாம்.

வேலை தொடர்பான விளம்பர அறிவிப்புகளை

https://www.cipet.gov.in/job-opportunities/downloads/18-12-2023-001/Essential_Qualification.pdf
https://www.cipet.gov.in/job-opportunities/downloads/18-12-2023-001/Advertisement.jpg
என்ற இணையதள லிங்குகளைக் கிளிக் செய்து விண்ணப்பதாரர்கள் அறிந்துகொள்ள முடியும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Central Institute of Plastics Engineering & Technology (CIPET) has announced a Notification for the Recruitment of Project Manager, Project Assistant Vacancy. Those Candidates who are interested in the vacancy details & completed all eligibility criteria can read the Notification & Apply Online.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+