தமிழக அரசிற்கு உட்பட்டு கோவை மாவட்டத்தில் சமூக பாகாப்பு துறையின் கீழ் இயங்கும் அரசு குழந்தைகள் இல்லங்களில் காலியாக உள்ள ஆற்றுப்படுத்துனர் (Counsellor) பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 3 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.ஆயிரம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : சமூக பாகாப்பு துறையின் கீழ் இயங்கும் அரசு குழந்தைகள் இல்லம், கோவை
மேலாண்மை : தமிழக அரசு
பணி : Counsellor
மொத்த காலிப் பணியிடம் : 03
கல்வித் தகுதி : அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் Psychology பாடப்பிரிவில் முதுநிலைப் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஊதியம் : நாள் ஒன்றுக்கு ரூ.ஆயிரம் ஊதியம் வழங்கப்படும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் The Superintendent, Annai Sathya Government Children Home, Gandhi Manager, Peelamedu Post, Coimbatore-641004. என்ற முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அசல் ஆவணங்களுடன் சேர்த்து சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 10.02.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://coimbatore.nic.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.