இ.எஸ்.ஐ., நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023:
மத்திய அரசின் தொழிலாளர் அரசு காப்பீடு கழகத்தின் அயனாவரம் மருத்துவமனையில், காலியாக உள்ள ஆறு பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் நேர்காணலில் பங்கேற்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
நிர்வாகம் : மத்திய அரசின் தொழிலாளர் அரசு காப்பீட்டு கழக மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனை, கே.கே.நகர், சென்னை (Employees State Insurance Corporation)
மேலாண்மை : மத்திய அரசு

பணி விவரம்
· Junior Resident
நேர்காணல் தேதி: 10.10.2023
கல்வித் தகுதி
விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிலையத்தில், பணிக்கு ஏற்ற பாடத்திட்டத்தில் 'MBBS' படித்திருக்க வேண்டும். மெடிக்கல் கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும். மேலும் நேர்காணலின்போது, 'உள்ளுறை இன்டர்ன்ஷிப்' நிறைவு செய்ததற்கான சான்றிதழை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும்.
காலியாக உள்ள பதவிகள், அதற்குரிய கூடுதல் கல்வி தகுதியை கீழே கொடுக்கப்பட்ட அறிவிப்பில் பார்வையிடவும்.
வயது வரம்பு
விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு நேர்காணல் நாளன்று 30 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். இருப்பினும் வயது வரம்பில் வழங்கப்பட்ட தளர்வுகள் குறித்த விரிவான விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
ஊதியம் விவரம்:
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில், மாத ஊதியம் ரூ.1,10,742/- வழங்கப்படும். மற்ற சலுகைகள் வழங்கப்படாது. ஒருங்கிணைந்த ஊதியத்துடன் கூடுதலாக, விதிகளின்படி போக்குவரத்து மற்றும் பஞ்சப்படி மட்டும் வழங்கப்படும்.
தேர்வு முறை
இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில், தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
நோட் இட் ப்ளீஸ்...!
இந்த பணியிடங்கள் முற்றிலும் தற்காலிக அடிப்படையில் நிரப்படும்.
மறக்காதீங்க...! ஓன்லி 9 டேஸ்...!
Ø விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்ய வேண்டும்.
Ø படிவத்துடன் கோரப்பட்ட போதிய ஆவணங்களுடன் 10.10.2023ம் தேதி காலை 10 மணிக்கு துவங்கும் நேர்காணலில் போது உடன் எடுத்து வரவேண்டும்.
Ø கோரப்பட்ட ஆவணங்களுடன் பரிந்துரைக்கப்பட்ட முறையில் விண்ணப்ப படிவங்கள் இல்லையெனில் நிராகரிக்கப்படும். நேர்காணலுக்கான பதிவு காலை 9 மணி முதல் 11 மணி வரை நடக்கும்.
நேர்காணல் நடக்கும் இடம், நேர்காணலுக்கான கட்டணம் உள்ளிட்ட இதர கூடுதல் விபரங்களை கீழே கொடுக்கப்பட்ட அறிவிப்பு வாயிலாக அறிந்து கொள்ளவும். க்ளிக் ப்ளீஸ்....!


Click it and Unblock the Notifications












