ரூ.47 ஆயிரம் ஊதியத்தில் சென்னையில் கொட்டிக்கிடக்கும் அரசாங்க வேலை!

சென்னை கூட்டுறவு வங்கியில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 203 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

சென்னை கூட்டுறவு வங்கியில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 203 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

ரூ.47 ஆயிரம் ஊதியத்தில் சென்னையில் கொட்டிக்கிடக்கும் அரசாங்க வேலை!

இப்பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு உள்ளூரிலேயே ரூ.47 ஆயிரம் வரையிலும் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

சென்னை மத்திய கூட்டுறவு வங்கி

சென்னை மத்திய கூட்டுறவு வங்கி

Tamil Nadu Cooperative Recruitment சார்பில் சென்னையில் மத்திய கூட்டுறவு வங்கியில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களை நிரப்பிடும் வகையில் தற்போது அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. www.chndrb.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, சுமார் 203 உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.

காலிப் பணியிட விபரங்கள்

காலிப் பணியிட விபரங்கள்

மேலே குறிப்பிடப்பட்டுள்ளவாறு மொத்தம் 203 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, பொதுப்பிரிவு - 63, பிற்படுத்தப்பட்டோர் - 54, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் / சீர்மரபினர் - 41, பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லீம்) - 6, ஆதிதிராவிடர் - 31, ஆதிதிராவிடர் (அருந்ததியர்) -6, பழங்குடியினர் - 2 என இட ஒதுக்கீட்டு முறையில் ஆட்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். இதில் தேர்வு செய்யப்படுவோருக்கு மாதம் ரூ.14,000 முதல் ரூ.47,500 வரையில் ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கல்வித் தகுதி:

கல்வித் தகுதி:

சென்னை மத்திய கூட்டுறவு வங்கிகளில் காலியாக உள்ள இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஏதேனும் ஓர் துறையில் பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். அதோடு, கூட்டுறவுப் பயிற்சியும் முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

வயது வரம்பு:

இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விரும்புவோருக்கு 01.01.2019 அன்றைய தேதியின்படி வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி, உதவியாளர் பணிக்கு குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிமுறைப்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

முக்கிய நாட்கள்:-

முக்கிய நாட்கள்:-

  • சென்னை கூட்டுறவு வங்கி வேலை அறிவிப்பு வெளியான நாள் - 30 ஜனவரி 2020
  • விண்ணப்பப்பதிவு தொடங்கிய நாள் - 30 ஜனவரி 2020
  • விண்ணப்பிக்கக் கடைசி நாள் - 26 பிப்ரவரி 2020
  • எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள் - 29 மார்ச் 2020
  • மேலும் விபரங்களுக்கு!

    மேலும் விபரங்களுக்கு!

    இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://chndrb.in/ என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பப் படிவத்தினைப் பெற்று பூர்த்தி செய்து பிப்ரவரி 26 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இப்பணியிடத்திற்கான அறிவிப்பை நேரடியாகக் காண இங்கே கிளிக் செய்யவும்.

     

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Chennai District Cooperative Bank Recruitment 2020: Apply For Assistant Vacancy; 47,500 Salary
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+