சென்னை நகராட்சி நிர்வாகத் துறையில் காலியாக உள்ள சிறப்பு அதிகாரி பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகின்றன. இப்பணியிடத்திற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : சென்னை நகராட்சி நிர்வாகத் துறை
பணி : புவியியல் தகவல் அமைப்பு நிபுணர்
கல்வித் தகுதி :
ME Geoinformation, M.Tech Remote Sensing முடித்து 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றவர்கள்.
Geography பிரிவில் முனைவர் பட்டம் பெற்று 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணி : நகர அபிவிருத்தி நிபுணர்
கல்வித் தகுதி : பொறியியல் துறையில் சிவில் இன்ஜினியரிங் பிரிவில் பிஇ அல்லது Master of Planning பாடத்தில் முதுகலைப் பட்டம் பெற்று 5 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
ஊதியம் : மாதம் ரூ.60,000 வரையில்
தேர்வு முறை : கல்வித் தகுதி, பணி அனுபவத்தின் அடிப்படையில் நேர்முகத் தேர்விற்கு அழைக்கப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
(நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுபவர்கள் கல்வித்தகுதி, பணி அனுபவம் உள்படத் தேவையான அனைத்து அசல் சான்றிதழ்களையும் சமர்ப்பிக்க வேண்டும். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஒரு ஆண்டு பணி வழங்கப்படும். பின்னர் தேவைக்கேற்ப பணிக்காலம் நீட்டிக்கப்படும்.)
விண்ணப்பிக்கும் முறை : www.tnurbanfreetn.gov.in என்னும் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி : Commissioner of Municipal Administration, Urban Administrative Building, 11th floor, Raja Annamalaipuram, MRC Nagar. Chennai - 600 028
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி : 31.08.2019
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிய www.tnurbanfreetn.gov.in என்னும் அதிகாரப்பூர்வ இணைப்பிற்குச் சென்று காணலாம்.


Click it and Unblock the Notifications












