மத்திய அரசிற்கு உட்பட்ட சாலை ஆராய்ச்சி தொழில்நுட்ப மையத்தில் காலியாக உள்ள பணியிடத்தினை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 11 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ரூ.67,700 ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : சாலை ஆராய்ச்சி தொழில்நுட்ப மையம்
மேலாண்மை : மத்திய அரசு
பணி : விஞ்ஞானி
காலியிடங்கள் : 11
ஊதியம் : ரூ.67,700 மாதம்
கல்வித் தகுதி : பொறியியல் துறையில் நெடுஞ்சாலை, போக்குவரத்து பொறியியல் உள்ளிட்ட பிரிவில் எம்.இ, எம்.டெக் முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம் : ரூ.100
கட்டணம் செலுத்தும் முறை : ஆன்லைன் மூலம் செலுத்தலாம்.
விண்ணப்பிக்கும் முறை : www.crridom.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன் அதனை பிரிண்ட்அவுட் எடுத்து உரிய இடத்தில் புகைப்படம் ஒட்டி கையொப்பமிட்டு சுய சான்று செய்யப்பட்ட சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : Controller of Admisistration, CSIR-Central Road Research Institute, Delhi - Mathura Road, PO - CRRI, New Delhi - 110 025.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 22.02.2019
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி : 01.03.2019
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://www.crridom.gov.in/sites/default/files/detailed-advt-scientist-18-01-2019.pdf என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












