இந்திய ரயில்வேயின் கீழ் செயல்பட்டு வரும் மத்திய ரயில்வே மண்டலத்தில் காலியாக உள்ள Medical Practitioner (Doctor) பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 13 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.75 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : மத்திய ரயில்வே மண்டலம் (Central Railway)
பணி : Medical Practitioner (Doctor)
காலிப் பணியிடங்கள் : 13
வயது வரம்பு :
- விண்ணப்பதாரர் 56 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
- ரயில்வேயில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் 65 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி :
- இந்திய மருத்துவ கவுன்சில் அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் Medicine (MBBS) துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
- Specialists - MBBS தேர்ச்சியுடன் மருத்துவத் துறையில் முதுநிலைப் பட்டம் பெற்று 03 ஆண்டுகள் வரையில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
ஊதியம் : ரூ.75,000 மாதம்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தினை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அறிவிப்பில் உள்ள [email protected] எனும் மின்னஞ்சல் முகவரிக்கு கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 18.02.2022 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். நேர்முகத் தேர்வு Whatsapp Video Call மூலம் நடைபெறும்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://cr.indianrailways.gov.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












