இந்திய ரயில்வேயின் மத்திய ரயில்வே மண்டலத்தில் காலியாக உள்ள Physicians, Anaesthetist, Chest physician, உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 17 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.95 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : மத்திய இரயில்வே (Central Railway)
பணி : Physicians, Anaesthetist, Chest physician, GDMO
காலிப் பணியிடங்கள் : 17
கல்வித் தகுதி :
- அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையத்தில் எம்பிபிஎஸ், முதுநிலைப் பட்டம் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
- மேலும், குறைந்தது 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
விண்ணப்பதாரர் 53 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் : மாதம் ரூ.75,000 முதல் ரூ.95,000 மாதம்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் நடைபெறும் நேர்காணல் பங்கேற்க வேண்டும்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்:
Bharatratna Dr. Babasaheb Ambedkar Memorial Hospital, Central Railway, Byculla, Mumbai - 400 027
நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள் : 12.05.2021 முதல் 22.06.2021 வரையில்
தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://cr.indianrailways.gov.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












