12-வது தேர்ச்சியா? செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் வேலை வாய்ப்பு

சென்னையில் செயல்பட்டு வரும் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

By Saba

சென்னையில் செயல்பட்டு வரும் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ரூ.35 ஆயிரம் வரையிலும் ஊதியம் வழங்கப்பட உள்ள இப்பணியிடத்திற்கு 12-வது தேர்ச்சிபெற்றவர்கள் முதல் விண்ணப்பிக்கலாம். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையுங்கள்.

12-வது தேர்ச்சியா? செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் வேலை வாய்ப்பு

நிர்வாகம் : செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், சென்னை

மேலாண்மை : மத்திய அரசு

மொத்த காலிப் பணியிடங்கள் : 09

பணி:-

  1. செயலாளர்
  2. துணை நூலகர்
  3. ஸ்டெனோ கிரேடு II
  4. யு.டி.சி
  5. எல்.டி.சி
  6. அலுவலக கண்காணிப்பாளர்

கல்வித்தகுதி:-

செயலாளர் : 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வேகமாகக் குறிப்பெழுதும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

துணை நூலகர் : இளநிலை நூலகர் பட்டப்படிப்பு, கணினி பயன்பாட்டில் தேர்ச்சிக்கான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

ஸ்டெனோ கிரேடு II : 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வேகமாகக் குறிப்பெழுதும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

யு.டி.சி : ஏதேனும் ஒரு துறையில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

எல்.டி.சி. : 12ஆம் வகுப்பு தேர்ச்சியடைந்து ஆங்கிலத்தில் வேகமாகத் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

அலுவலக கண்காணிப்பாளர் : மத்திய மாநில அரசுகளின் கணக்குப்பதிவு துறையில் 5 முதல் 8 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:-

  • செயலாளர், துணை நூலகர், ஸ்டெனோ கிரேடு II, யு.டி.சி, எல்.டி.சி. உள்ளிட்ட பணியிடங்களுக்கு 18 முதல் 27 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
  • அலுவலக கண்காணிப்பாளர் பணியிடத்திற்கு அதிகபட்சம் 56 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம்:-

  • செயலாளர், துணை நூலகர், ஸ்டெனோ கிரேடு II, யு.டி.சி உள்ளிட்ட பணியிடங்களுக்கு ரூ.9,300 முதல் ரூ.34,800 வரையில்
  • எல்.டி.சி. பணியிடத்திற்கு ரூ.5,200 முதல் ரூ.20,200 வரையில்
  • அலுவலக கண்காணிப்பாளர் - ரூ.9,300 முதல் ரூ.34,800 வரையில்

விண்ணப்பிக்கும் முறை : செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் http://www.cict.in/ என்னும் அதிகாரப்பூர்வ இணையத்தில் விண்ணப்பத்தினைப் பெற்று, பூர்த்தி செய்த விண்ணப்பத்தைத் தேவையான ஆவணங்களுடன் இணைத்து கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : இயக்குநர், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், நூறடி சாலை, தரமணி, சென்னை - 600 013

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 2019 ஆகஸ்ட் 16ம் தேதிக்குள் கிடைக்கும் வகையில் அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://www.cict.in/pdf/Non-Academic Posts.pdf என்னும் அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Central Institute of Classical Tamil jobs for Personal Secretary/ Assistant Librarian/Steno in Chennai. Last Date to apply: 16 Aug 2019
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+