மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் மத்திய நிலத்தடி நீர் வாரியத்தில் (CGWB) காலியாக உள்ள ஓட்டுநர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 24 பணியிடங்கள் உள்ள நிலையில் இதற்கு ரூ.63 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : மத்திய நிலத்தடி நீர் வாரியம் (CGWB)
மேலாண்மை : மத்திய அரசு
மொத்த காலிப் பணியிடங்கள் : 24
பணி : Staff Car Driver
கல்வித் தகுதி : அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பதோடு ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு : விண்ணப்பதாரர் 18 முதல் 27 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் : ரூ.19,900 முதல் ரூ.63,200 மாதம்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் http://cgwb.gov.in/Vacancy-Notice.html எனும் இணையதளத்தின் மூலம் விண்ணப்பப் படிவம் பெற்று, பூர்த்தி செய்து, அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : அறிவிப்பு வெளியாகி 45 நாட்களுக்குள் விண்ணப்பப் படிவம் கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப்படிவத்தினைப் பெறவும் www.cgwb.gov.in எனும் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தைக் காணவும்.


Click it and Unblock the Notifications












