மத்திய அரசிற்கு உட்பட்ட சென்டிரல் கோல்பீல்ட்ஸ் லிமிடெட் என்னும் நிலக்கரி நிறுவனத்தில் காலியாக உள்ள இளநிலை ஓவர்மேன் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 75 பணியிடங்கள் உள்ள நிலையில் இதற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் நவம்பர் 10ம் தேதிக்குள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : சென்டிரல் கோல்பீல்ட்ஸ் லிமிடெட்
மேலாண்மை : மத்திய அரசு
மொத்த காலிப் பணியிடங்கள் : 75
பணி : இளநிலை ஓவர்மேன்
கல்வித் தகுதி : இளநிலை ஓவர்மேன் பணிக்கான தகுதிச் சான்றிதழ் பெற்றிருப்பதுடன் Gas Testing, First-Aid Testing ஆகியவற்றில் சான்றிதழ்கள் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு : 10.11.2019 தேதியின்படி 18 முதல் 30 வயதிற்கு உட்பட்ட இருக்க வேண்டும்.
ஊதியம் : மாதம் ரூ.31,852 வரையில்
தேர்வு முறை : எழுத்துத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம் : ரூ.200. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை : தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.centralcoalfields.in என்னும் இணையதளத்தின் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பித்தவுடன் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக்கொள்ளுவது அவசியம்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் : 10.11.2019
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://www.centralcoalfields.in/pdfs/updts/2019-2020/01_10_2019_ccl_recruitment_092019.pdf என்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












