மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் C-DAC எனும் கணினி தொழில்நுட்ப மேம்பாட்டு நிறுவனத்தில் காலியாக உள்ள Project Manager, Sr. Project Engineer உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 261 பணியிடங்கள் உள்ள நிலையில் இதற்கு ஆண்டுக்கு ரூ.17.30 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : கணினி தொழில்நுட்ப மேம்பாட்டு நிறுவனம் (CDAC)
மேலாண்மை : மத்திய அரசு
பணி மற்றும் காலிப் பணியிடங்கள் :
- Project Manager - 11 பணியிடங்கள்
- Sr. Project Engineer/ Project Lead/ Module Lead - 29 பணியிடங்கள்
- Project Engineer - 193 பணியிடங்கள்
- Project Associate - 28 பணியிடங்கள்
மொத்த காலிப் பணியிடங்கள் : 261
கல்வித் தகுதி :
அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் MCA, B.E, B.Tech அல்லது அதற்கு தொடர்புடைய பாடப்பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
- Project Manager - 50 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
- Project Engineer/ Project Lead/ Module Lead - 45 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
- Other Posts - 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் : ஆண்டுக்கு ரூ.17.52 லட்சம் வரை ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் 22.12.2021 தேதிக்குள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தினைப் பூர்த்தி செய்து ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு அல்லது நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.cdac.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












