மத்திய யுனானி மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் என்று அழைக்கப்படும் சென்ட்ரல் கவுன்சில் ஃபார் ரிசர்ச் இன் யுனானி மெடிசன் (Central Council For Research in Unani Medicine -CCRUM) கவுன்சிலில் பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இங்கு தற்போது சீனியர் ரிசர்ச் ஃபெல்லோ, ஜூனியர் ரிசர்ச் ஃபெல்லோ (Senior Research Fellow / Junior Research Fellow -Unani) பணியிடங்கள் காலியாக உள்ளன. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு https://drive.google.com/file/d/1zxglqxgLVQS7u-1_8fvKP7qWQrRAHDra/view என்ற இணையதள லிங்க்கை கிளிக் செய்யவும்.
மத்திய யுனானி மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (CCRUM) என்பது மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஒரு தன்னாட்சி அமைப்பாகும். 1978-ல் நிறுவப்பட்டது முதல், யுனானி மருத்துவத்தில் ஆராய்ச்சிக்கான உச்ச அரசாங்க அமைப்பாக சிசிஆர்யுஎம் (CCRUM) செயல்பட்டு வருகிறது.
மேலும், யுனானி மருத்துவ முறையின் பயன்பாட்டு மற்றும் அடிப்படை அம்சங்களில் அறிவியல் ஆராய்ச்சிகளை மேற்கொள்வதிலும் இந்த கவுன்சில் ஈடுபட்டுள்ளது.

இதன் விளைவாக, சிசிஆர்யுஎம்-மின் இருப்பு கடந்த நான்கு தசாப்தங்களாக, கவுன்சில் மருத்துவ ஆராய்ச்சி, மருந்து தரநிலைப்படுத்தல், மருத்துவ தாவரங்களின் கணக்கெடுப்பு மற்றும் வளர்ப்பு மற்றும் இலக்கிய ஆராய்ச்சி ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளது.
மேலும் அதுமட்டுமல்லாமல், ஆராய்ச்சி சார்ந்த சுகாதார விரிவாக்க சேவைகள் மற்றும் தகவல், கல்வி மற்றும் தொடர்பு (IEC) செயல்பாடுகளும் கவுன்சிலின் திட்டங்களின் ஒரு பகுதியாக உள்ளது. டெல்லியில் உள்ள அலோபதி மருத்துவமனையில் ஆயுஷ் மையங்களின் கூட்டுத் திட்டத்தின் கீழ் சுகாதார சேவைகளின் விரிவாக்கம், ஆர்எம்எல்(RML) மருத்துவமனை, DDU மருத்துவமனை, AIIA மற்றும் சப்தர் ஜங் மருத்துவமனையில் பல யுனானி மருத்துவ மையங்கள் நிறுவப்பட்டுள்ளன.
நாடு முழுவதும் பரவியுள்ள அதன் 23 ஆராய்ச்சி மையங்களில் உள்ள விஞ்ஞானிகள் மற்றும் தொழில்நுட்ப மனிதவளத்தின் முயற்சியால், கவுன்சில் அதன் 17 காப்புரிமைகள், புதுமையான ஆராய்ச்சி முடிவுகளைப் பெற்றுள்ளது.
லும் அறிவியல் வெளியீடுகளுக்கு பல்வேறு தரப்பிலிருந்து பாராட்டுகளையும் குவித்துள்ளது.
இந்த பெருமைமிகு ஆராய்ச்சி கவுன்சிலில் தான் தற்போது சீனியர் ரிசர்ச் ஃபெல்லோ, ஜூனியர் ரிசர்ச் ஃபெல்லோ (Senior Research Fellow / Junior Research Fellow -Unani) பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதிடிசம்பர் 22 ஆகும்(22.12.2023)
கல்வித்தகுதி:
சீனியர் ரிசர்ச் ஃபெல்லோ, ஜூனியர் ரிசர்ச் ஃபெல்லோ (Senior Research Fellow / Junior Research Fellow -Unani) பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு (Graduate Degree, Post Graduate Degree) முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சீனியர் ரிசர்ச் ஃபெல்லோ, ஜூனியர் ரிசர்ச் ஃபெல்லோ (Senior Research Fellow / Junior Research Fellow -Unani) வயது த்தகுதி:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் 35 வயதுக்குள் உள்ளவராக இருக்கலாம்.
சீனியர் ரிசர்ச் ஃபெல்லோ, ஜூனியர் ரிசர்ச் ஃபெல்லோ (Senior Research Fellow / Junior Research Fellow -Unani) ஊதிய விவரம்:
இந்த பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ரூ.25,000/- முதல் ரூ.28,000/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும் எனத் தெரிகிறது.
தேர்வு முறை:
சீனியர் ரிசர்ச் ஃபெல்லோ, ஜூனியர் ரிசர்ச் ஃபெல்லோ (Senior Research Fellow / Junior Research Fellow -Unani) பணிக்கு தகுதியான நபர்கள் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள நபர்கள் தங்களது விண்ணப்பத்துடன் தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து 22.12.2023 அன்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் நடைபெறவுள்ள நேர்காணலின் போது காலை 9.00 மணிக்குள் நேரில் சமர்ப்பிக்கலாம்.
கூடுதல் விவரங்களுக்கு https://drive.google.com/file/d/1zxglqxgLVQS7u-1_8fvKP7qWQrRAHDra/view என்ற இணையதள லிங்க்கை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












