மத்திய அரசின் இந்திய போட்டி ஆணையத்தில் (CCI) காலியாக உள்ள இணை பொது இயக்குநர் மற்றும் துணை பொது இயக்குநர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 12 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.2.15 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : இந்திய போட்டி ஆணையம் (CCI)
மேலாண்மை : மத்திய அரசு
பணி : Joint Director General மற்றும் Deputy Director-General
காலிப் பணியிடங்கள் : 12
கல்வித் தகுதி : அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் சட்டத் துறையில் இளநிலைப் பட்டம், Economics, Commerce, Business Administration with finance மற்றும் accounts, CA, CS, Cost Accountant அல்லது அதற்கு இணையான பாடப்பிரிவில் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மேலும் Competition Law, Matters-ல் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
விண்ணப்பதாரர் 56 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் :
Joint Director-General பணிக்கு Level 13-ன் படி ரூ.1,23,100 முதல் ரூ.2,15,900 வரையிலும், Deputy Director-General பணிக்கு Level 12-ன் படி ரூ.78,800 முதல் ரூ.2,09,200 வரையிலும் ஊதியம் வழங்கப்படும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.cci.gov.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தினை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அறிவிப்பில் உள்ள முகவரிக்கு கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 15.02.2022 தேதிக்குள் கிடைக்குமாறு விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.cci.gov.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












