சென்ட் பேங்க் ஹோம் பைனான்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் (Cent Bank Home Finance Limited) பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்ப வெளியாகியுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்யலாம். கூடுதல் விவரங்களுக்கு https://ibpsonline.ibps.in/cbhfloct23/ என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.
சென்ட் பேங்க் ஹோம் ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம் என்பது டெபாசிட் எடுக்கும் வீட்டுவசதி நிதி மற்றும் அடமான நிறுவனமாகும், இது நான்கு பொதுத்துறை நிறுவனங்களால் கூட்டாக ஊக்குவிக்கப்படுகிறது, அதாவது. சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா, நேஷனல் ஹவுசிங் பேங்க், யூனிட் டிரஸ்ட் ஆஃப் இந்தியா மற்றும் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுக் கழகத்தின் குறிப்பிட்ட நிறுவனம் ஆகியவற்றால் கூட்டாக சிறப்பான முறையில் நிர்வாகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்த சென்ட் பேங்க் ஹோம் ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம், சென்டிரல் பேங்க் ஆஃப் இந்தியா எனப்படும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் துணை நிறுவனமாகும்.
வீட்டுக் கடன் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை பொதுமக்களுக்கு இந்த நிறுவனம் வழங்கி வருகிறது. அப்னா கர் விட்ட நிகம் லிமிடெட் என்ற பெயரில் 1991-ம் ஆண்டு மே மாதம் 7-ம் தேதி தொடங்கப்பட்டது. பின்னர் அதன் பெயரை 19 ஜூன் 1992-ல் சென்ட் பேங்க் ஹோம் ஃபைனான்ஸ் லிமிடெட் என்று சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி மாற்றியது.
இந்நிறுவனம் ஒன்பது மாநிலங்களில் முன்னிலையில் உள்ளது. அதன் இலக்கு வாடிக்கையாளர்களில் தனிநபர்கள், நபர்களின் சங்கங்கள், நிறுவனங்கள், நிறுவனங்கள் மற்றும் சமூகங்கள் அடங்கும்.
இந்த பெருமைமிகு சென்ட் பேங்க் ஹோம் ஃபைனான்ஸ் லிமிடெட் (சிபிஎச்எஃப்எல்) நிறுவனத்தில்தான் தற்போது சீனியர் ஆபீஸர், ஆபீஸர் (Senior Officer, Officer) பணியிடங்கள் காலியாக உள்ளன. மொத்தம் 60 பணியிடங்கள் காலியாக உள்ளதாகத் தெரியவந்துள்ளது.
இந்தப் பணிகளுக்கு விண்ணப்பம் செய்யும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு (Graduate Degree, Master Degree) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
21 வயது பூர்த்தியான 35 வயதுக்கு உட்பட்டவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு ரூ.4,00,000/- வரை ஆண்டு ஊதியம் வழங்கப்படும்.
விண்ணப்பதாரர்கள் ஆன்-லைன் டெஸ்ட்(Online Test) மற்றும் நேர்முக தேர்வு(Interview) மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். டிசம்பர் 11-ம் தேதிக்குள் விண்ணப்பத்தை அனுப்பவேண்டும். 11.12.2023ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.
விளம்பரம் தொடர்பான அறிவிப்பை https://www.cbhfl.com/pdf/CBHFL - NOTIFICATION FOR THE POST OF OFFICER AND SR. OFFICER 2023-24.pdf என்ற இணையதள லிங்கில் காணலாம்.
கூடுதல் விவரங்களுக்கு https://ibpsonline.ibps.in/cbhfloct23/ என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.


Click it and Unblock the Notifications












