மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் கன்டோன்மென்ட் போர்டில் காலியாக உள்ள Chowkidar மற்றும் Fitter பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தலா இரண்டு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ள நிலையில் இதற்கு ரூ.63 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையுங்கள்.

நிர்வாகம் : கன்டோன்மென்ட் போர்டு, (Cantonment Board)
மேலாண்மை : மத்திய அரசு
பணி மற்றும் காலிப் பணியிடங்கள் :
- Chowkidar - 1
- Fitter - 1
மொத்த காலிப் பணியிடம் : 02
கல்வித் தகுதி :
Chowkidar - 10-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
Fitter - அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று, பைப் ஃபிட்டர், பிளம்பர் பிரிவில் ITI- தேசிய வர்த்தக சான்றிதழ் (NTC) அல்லது தேசிய பயிற்சி சான்றிதழ் (NAC) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
04.03.2022 தேதியின் படி விண்ணப்பதாரர் 18 முதல் 30 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்க வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
ஊதியம் :
- Chowkidar - ரூ.15,000 முதல் ரூ.47,600 மாதம்.
- Fitter - ரூ.19,900 முதல் ரூ.63,200 மாதம்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் 04.03.2022 தேதிக்குள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவம் பெற்று, பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :
CHIEF EXECUTIVE OFFICER,
Office of Cantonment Board Kamptee,
Kamptee Cantonment,
District - Nagpur,
State - Maharashtra
Pin Code : 441 001
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 04.03.2022 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் திறன் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.kamptee.cantt.gov.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












