மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான இயற்கை எரிவாயு, எண்ணெய் உற்பத்தி மற்றும் விற்பனை நிறுவனமான பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் (BPCL) காலியாக உள்ள Graduate மற்றும் Technician Apprentice பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 168 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.25 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

நிர்வாகம் : பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (BPCL)
பணி : Graduate மற்றும் Technician Apprentice
மொத்த காலிப் பணியிடம் : 168
கல்வித் தகுதி :
Graduate Apprentice - பணி சம்பத்தப்பட்ட துறையில் பொறியியல் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Technician Apprentice - பொறியியல் துறையில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு : விண்ணப்பதாரர் 18 முதல் 27 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் :
- Graduate Apprentice - ரூ.25,000
- Technician Apprentice - ரூ.18,000
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.bharatpetroleum.com என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் 20.07.2021 மற்றும் 25.07.2021 அன்றுக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.bharatpetroleum.com அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ லிங்க்கை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












