நாட்டின் மிகப்பெரிய மின் உற்பத்தி சாதன உற்பத்தியாளரான, 'பெல்' நிறுவனத்தின் மருத்துவமனையில், சிறப்பு மருத்துவர்கள் காலிப் பணியிடங்களுக்கு, விண்ணப்பிக்கலாம் என, அந்த நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருவெறும்பூரில் இயங்கி வரும் 'பெல்' நிறுவன மருத்துவமனையில், ஏழு பகுதி நேர மருத்துவ ஆலோசகர்கள் பணியிடங்களுக்கு, தகுதி மற்றும் ஆர்வமுள்ளவர்கள் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்.நிர்வாகம்: பாரத மிகுமின் நிறுவனம் (BHEL)

மேலாண்மை: மத்திய அரசு
விண்ணப்பிக்கும் முறை: ஆஃப்லைன்
விண்ணப்பிக்க கடைசி தேதி - நிர்ணயிக்கப்படவில்லை
பணி விவரங்கள்
• சூப்பர் ஸ்பெஷலிஸ்ட்
• ஸ்பெஷலிஸ்ட்
விண்ணப்பக்கட்டணம்
கட்டணம் ஏதும் நிர்ணயிக்கப்படவில்லை. அதிகாரப்பூர்வ தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்படும் விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து, அறிவிப்பாணையில் கொடுக்கப்பட்ட மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். தகுதி உடைய நபர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர்.
வயது வரம்பு
01.08.2022 படி 64 வயதிற்குட்பட்டவர்கள் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு தளர்வுகளுக்கு, அதிகாரப்பூர்வ அறிவிப்பு வாயிலாக காணலாம்.

கல்வி தகுதி
அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி அல்லது பல்கலைக்கழகங்களில், PTMC Specialist - Diploma / DegreePTMC Super Specialist (Medical Oncology ,Urology ) - DM/DNB , MCH Urology பாடங்களில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம்
பணிக்கு தேர்வாகும் நபர்கள், மணிக்கு என, ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அது குறித்த விவரங்களை கீழே கொடுக்கப்பட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு வாயிலாக தெரிந்து கொள்ளவும்.
ஆர்வமும், தகுதியும் உள்ள மருத்துவ வல்லுநர்கள் பகுதி நேர மருத்துவ ஆலோசகர் விண்ணப்பப் படிவத்தை, https://careers.bhel.in என்ற இணையதளம் வாயிலாக பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
பின், அந்த விண்ணப்ப படிவத்தைப் பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்கள் இணைத்து [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
இருப்பினும், பயணப்படி, வயது வரம்பு, தெரிவு முறை, இன்ன பிற சலுகைகள், விண்ணப்பிக்கும் முறை குறித்த முழு விவரங்களை அறிய, கீழே சொடுக்கவும்...!


Click it and Unblock the Notifications












