மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான பெல் நிறுவனத்தில் காலியாக உள்ள பயிற்சி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு பொறியியல், மனிதவளத் துறை படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : பெல்
மேலாண்மை : மத்திய அரசு
பணி மற்றும் காலிப் பணியிட விபரங்கள்
- பொறியியல் பயிற்சி : 100
- நிர்வாகப் பயிற்சியாளர் (எச்ஆர், நிதி) : 45
வயது வரம்பு :-
- பொறியியல் பயிற்சி : 01.04.2019 தேதியின்படி 27 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
- நிர்வாகப் பயிற்சியாளர் (எச்ஆர், நிதி) : 01.04.2019 தேதியின்படி 29 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி :-
- பொறியியல் பயிற்சி : பொறியியல் துறையில் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், சிவில், கெமிக்கல் பிரிவுகளில் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
- நிர்வாகப் பயிற்சியாளர் (எச்ஆர், நிதி) : மனித மேலாண்மை, நிதியியல் துறையில் 60 சதவீத மதிப்பெண்களுடன் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
மனித வளத்துறை நிர்வாகப் பயிற்சியாளர் பணியிடத்திற்கு மனித வளத் துறை, Personnel Management, Industrial Relations, Social Work, Business Administration துறைகளில் 55 சதவீத மதிப்பெண்களுடன் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
நிதித்துறைக்கு CA, CWA,CMA முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஊதியம் : மாதம் ரூ.50,000 முதல் ரூ.1,60,000 வரையில்
தேர்வு முறை :
- கணினி வழி எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
- தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஒரு வருடம் பயிற்சி வழங்கப்படும்.
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி : 25.05.2019 - 26.05.2019
விண்ணப்பக் கட்டணம் :
- பொது மற்றும் ஓபிசி பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு - ரூ.800.
- மற்ற அனைத்து பிரிவு விண்ணப்பதாரர்களுக்கும் - ரூ.300
விண்ணப்பிக்கும் முறை : www.careers.bhel.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 06.05.2019
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.careers.bhel.in அல்லது https://careers.bhel.in/et_2019/jsp/et_eng_index.jsp என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












