மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பாரத மிகு மின் நிறுவனம் என்று அழைக்கப்படும் பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் (பெல்-bhel) நிறுவனத்தில் பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வந்துள்ளது. தகுதியும், திறமையும் உள்ள நபர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்யலாம். கூடுதல் விவரங்களுக்கு careers.bhel.in என்ற இணையதள முகவரியைத் தொடர்பு கொள்ளலாம்.
பாரத மிகு மின் நிறுவனம் என்று அழைக்கப்படும் Bharat Heavy Electrical Limited மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் மகாரத்னா மதிப்பைப் பெற்ற மிகப் பெரிய நிறுவனமாக அமைந்துள்ளது. நாட்டில் உள்ள மிகப்பெரிய தொழிற்சாலை களில் இதுவும் ஒன்று.
நாட்டின் போபால், ஹரித்வார், ஹைதராபாத், ஜான்சி, திருச்சிராப்பள்ளி, ராணிப்பேட்டை ஆகிய ஊர்கள் உள்பட பதினைந்துக்கும் மேற்பட்ட இடங்களில் இந்த நிறுவனத்தின் உற்பத்திப் பிரிவுகள் உள்ளன. இதன் தலைமை அலுவலகம் புது டெல்லியில் அமைந்துள்ளது.

இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் மின்னாக்கி நிலையங்களை அமைப்பதற்கு ஏதுவாக நான்கு வணிகக் கோட்டங்கள் (POWER SECTORS) உருவாக்கப்பட்டுள்ளன. பன்னாட்டு இயக்கங்களுக்காக தனிப்பிரிவும் உள்ளது. (INTERNATIONAL OPERATIONS DIVISION) . மின்னுருவாக்கம் நிலையங்களுக்குத் தேவையான பாய்லர் எனப்படும் கொதிகலன், டர்பைன் எனப்படும் சுழலிகள், டர்போ ஜெனரேட்டர்கள் (சுழலி மின்னாக்கிகள்), நிலைமின்னியல் தூசு வடிகட்டிகள் (Electro Static Precipitators- ESP) போன்ற பல்வேறு பெருவகை மின்னுருவாக்குத் துணைக் கருவிகளையும், சிமென்ட், எண்ணெய் தூய்மைப்படுத்து நிலையங்கள் போன்ற தொழில் துறை நிறுவனங்களுக்குத் தேவையான துணைக்கருவிகளை இந்நிறுவனம் உருவாக்கி வழங்குகிறது.
மிழில் "பாரத மிகுமின் நிறுவனம் அல்லது தொழிற்சாலை" என்றும் சுருக்கமாக "பெல்" (BHEL) என்றும் இந்நிறுவனம் அழைக்கப்படுகிறது.தமிழ் நாட்டில் திருச்சிராப்பள்ளி, ராணிப்பேட்டை மற்றும் சென்னை ஆகிய ஊர்களில் இதன் கிளைகள் உள்ளன. தற்போது திருமயத்திலும் மற்றொரு உற்பத்திப் பிரிவினை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
தமிழகத்தின் திருச்சிராப்பள்ளி பெல் பிரிவில் உயர் அழுத்தக் கொதிகலன்கள் படைக்கப்படுகின்றன. இந்தக் கொதி கலன்கள், இருநூறு மெகா வாட்டு முதல் எழுநூறு மெகா வாட்டுகள் வரை மின்சாரம் படைப்பதற்குத் தேவையான் நீராவியை உருவாக்கி வழங்கும். உயர் அழுத்தக் கொதிகலன்கள் தவிர, அணுமின் நிலையங்களுக்குத் தேவையான வெப்பப் பரிமாற்றிகள், பாய்மப் படுகை எரிப்புக் கொதிகலன்கள், குமிழ் விடும் பாய்மப் படுகை எரிப்புக் கொதிகலன்கள், இணை சுழற்சி பாய்மப் படுகை எரிப்புக் கொதிகலன்கள், வெப்ப மீட்பு நீராவி உற்பத்திக் கலன்கள், தொழிற் சாலைகளுக்குத் தேவையான தனித்தேவை மின் உருவாக்கு நிலையங்கள், தொழிலகங்களுக்குத் தேவையான வெப்பப்
ரிமாற்றிகள்,தொழிலக வால்வுகள் போன்றவையும் இங்கே படைக்கப்படுகின்றன. இந்த பிரிவில் மட்டும் ஏறத்தாழ பத்தாயிரம் நிரந்தர ஊழியர்கள் பணி புரிந்து வருகின்றனர். நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் சிறப்பான கருவிகளைத் தயாரித்து அளித்து தொழிலில் பீடுநடை போட்டு வருகிறது பெல் நிறுவனம்.
இந்த சிறப்புமிக்க பொத்துறை நிறுவனமான பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல் நிறுவனத்தில்தான் தற்போது சூப்பர்வைசர் டிரைய்னி பிரிவில் மெக்கானிக்கல் 30, சிவில் 30, எச்.ஆர். 15 என மொத்தம் 75 இடங்கள் உள்ளன.
இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க எச்.ஆர்., பணிக்கு பி.பி.ஏ., பி.எஸ்.டபிள்யு படிப்பையும் மற்ற பணிகளுக்கு டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
இந்தப் பணியிடங்களுக்கு வயது தகுதியாக 1.9.2023-என்ற தேதியின் அடிப்படையில் 27 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகையும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பணியிடங்களுக்கு தேர்ச்சி முறையாக ஆன்லைன் எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு முறைகள் கடைப்பிடிக்கப்படும்.
ஆன்-லைன் முறையில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக்கட்டணமாக ரூ. 795 செலுத்த வேண்டி இருக்கும். எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் ரூ. 295 மட்டும் செலுத்தினாலே போதுமானது.
இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்ய கடைசி நாள் டிசம்பர் 10-ம் தேதியாகும்.(10.12.2023).
கூடுதல் விவரங்களுக்கு careers.bhel.in என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொண்டு அறியலாம்.


Click it and Unblock the Notifications












