பாரதியார் பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள Technical Officers, Technical Assistants உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 15 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் முதல் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. ரூ.50 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : பாரதியார் பல்கலைக் கழகம் (Bharathiyar University)
மொத்த காலிப் பணியிடம் : 15
பணி : Technical Officers, Technical Assistants, Programmer, Lab Attender உள்ளிட்ட பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
கல்வித் தகுதி:
12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், பணிக்கு சம்பந்தப்பட்ட துறைல் இளநிலைப் பட்டம், M.Sc, Ph.D என இவற்றில் ஏதேனும் ஒன்று தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஊதியம் : ரூ.10,000 முதல் அதிகபட்சம் ரூ.50,000 மாதம்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://cdn.b-u.ac.in அல்லது அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள முகவரிக்கு 23.08.2021 தேதிக்குள் தங்களது விண்ணப்பப் படிவம் கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : விண்ணப்பதாரர் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.cdn.b-u.ac.in என்னும் இணையதளம் அல்லது மேலே குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பினைக் காணவும்.