மத்திய அரசிற்கு உட்பட்ட இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனத்தில் (BESST-IIHR) காலியாக உள்ள Business Executive பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 2 பணியிடங்கள் உள்ள நிலையில் இதற்கு ரூ.31 ஆயிரம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனம் (BESST-IIHR)
மேலாண்மை : மத்திய அரசு
பணி : Business Executive
கல்வித் தகுதி :
- அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் எம்பிஏ, முதுநிலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- மேலும், MS Office, Content Writing ஆகிய பணிகளில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
ஆண் விண்ணப்பதாரர் 30 வயதிற்கு உட்பட்டும், பெண் விண்ணப்பதாரர் 35 வயதிற்கு உட்பட்டும் இருக்க வேண்டும்.
ஊதியம் : மாதம் ரூ.31,000
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.iihr.res.in அல்லது கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் உள்ள விண்ணப்பப் படிவத்தினைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.iihr.res.in அல்லது கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












