மத்திய அரசின் கீழ் செயல்படும் பொதுத்துறை நிறுவனமான பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் (பெல்) பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இந்த வேலைகளுக்கு விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு bel-india.in என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.
இந்தப் பெருமைவாய்ந்த பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில்தான் (பெல்) தற்போது பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வந்துள்ளது.
இங்கு தற்போது சீனியர் பீல்டு ஆப்பரேஷன் இன்ஜினியர் 6, பீல்டு ஆப்பரேஷன் இன்ஜினியர் 29 என மொத்தம் 35 இடங்கள் காலியாக உள்ளன.
பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவன (பெல்) பணியிடங்களுக்கான கல்வித்தகுதி: இந்த வேலைக்கு விண்ணப்பிக்க பி.இ., / பி.டெக்., / எம்.சி.ஏ., முடித்திருக்க வேண்டும்.

பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவன (பெல்) பணியிடங்களுக்கான வயதுத்தகுதி: 1.2.2024 அடிப்படையில் சீனியர் பீல்டு ஆப்பரேஷன் இன்ஜினியர் 45, மற்ற பணிக்கு 40 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இடஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை அறிவிக்கப்பட்டு உள்ளது.
தேர்ச்சி முறை: இந்த வேலைகளுக்கு எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு முறையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: இந்த வேலைகளுக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பங்களை அனுப்பவேண்டும்
விண்ணப்பக்கட்டணம்: இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பக் கட்டமமாக ரூ. 531 செலுத்தவேண்டும்.எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினர் கட்டணம் செலுத்தத் தேவை இல்லை.
கடைசிநாள்: பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவன (பெல்) பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரும் 13.3.2024-ம் தேதிக்குள் அனுப்பவேண்டும்.
இணையதள முகவரி: கூடுதல் விவரங்களுக்கு bel-india.in என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.


Click it and Unblock the Notifications












