நவ ரத்னா அந்தஸ்து பெற்ற, 'பெல்' நிறுவனத்தின் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என, அந்த நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு தகுதி மற்றும் ஆர்வமுள்ளவர்கள் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம். ஊதியம் மாதம் 90 ஆயிரம் ரூபாய் வரை பெற முடியும்.
நிர்வாகம் : பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனம் (BHARAT ELECTRONICS LIMITED)
மேலாண்மை : மத்திய அரசு
விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்
விண்ணப்பிக்க கடைசி தேதி: 08.08.2023

பணி விவரம்
Ø உதவி பொறியாளர் (Engineering Assistant (Trainee)
Ø டெக்னீசியன் சி (Technician C)
Ø அலுவலக உதவியாளர் - கம்யூட்டர் ஆப்ரேட்டர் சி (Clerk-cumComputer
Operator C)
கல்வித் தகுதி
விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிலையத்தில், பதவிக்கு ஏற்ற கல்வி தகுதியை பெற்றிருத்தல் அவசியமாகும். டிப்ளமோ, பி.காம்., பி.பி.எம்., பொறியியல், டிப்ளமோ படித்தவர்கள் தகுதியானவர்கள் ஆவார். இருப்பினும், கூடுதல் விபரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
வயது வரம்பு
விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது 01.07.2023 தேதியின் படி 28க்குள் இருக்க வேண்டும். வயது வரம்பில் வழங்கப்பட்ட தளர்வுகள் குறித்த விரிவான விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
ஊதியம் விவரம்
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில், மாத ஊதியம் வழங்கப்படும்.
Ø உதவி பொறியாளர் (Engineering Assistant (Trainee) ரூ.24.500/- - ரூ.90,000 வரை
Ø டெக்னீசியன் சி (Technician C) ரூ.21,500 - ரூ.82,000
Ø அலுவலக உதவியாளர் - கம்யூட்டர் ஆப்ரேட்டர் சி (Clerk-cumComputer
Operator C) ரூ.21,500 - ரூ.82,000
தேர்வு முறை
இந்த பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு, ட்ரேட் தேர்வு அடிப்படையில், தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
நோட் இட் ப்ளீஸ்...!
பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வம் மற்றும் தகுதியுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அனுப்பி வைக்கப்பட வேண்டும்.
அறிவிப்பில் கொடுக்கப்பட்ட அதிகாரப்பூர்வ முகவரிக்கு கோரப்பட்ட சான்றிதழ்களுடன் பிழையின்றி பூர்த்தி செய்து, விண்ணப்பத்தை ஆன்லைனில் நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் பதிவேற்றவேண்டும்.
மறக்காதீங்க... உடனே அப்லோடு பண்ணுங்க... 08.08.2023ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மறக்காதீங்க...!
க்ளிக் ப்ளீஸ்....!.
https://bel-india.in/Documentviews.aspx?fileName=NON EX WEB AD - ENGLISH-19-07-2023.pdf


Click it and Unblock the Notifications












