பெல் என்று அழைக்கப்படும் பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் (பெல்), பல்வேறு பிரிவில் காலியாக உள்ள இடங்களுக்கு மூன்றாண்டு ஒப்பந்த பணி இடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பம் செய்யலாம். கூடுதல் தகவல்களைப் பெற bel-india.in என்ற இணையதள முகவரியைக் கிளிச் செய்து காணலாம்.
இந்த சிறப்புவாய்ந்த பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் (பெல்), தான் தற்போது பல்வேறு பிரிவுகளில் பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வந்துள்ளது. இங்கு தற்போது டிரைய்னி இன்ஜினியர் பிரிவில் 47 இடங்கள் உள்ளன.

பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவன பணியிடங்களுக்கான கல்வித்தகுதி: இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்க குறைந்தது 55 சதவீத மதிப்பெண்களுடன் பி.இ., / பி.டெக்., முடித்திருக்க வேண்டும்.
பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவன பணியிடங்களுக்கான வயது விவரம்: இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க 1.2.2024 அடிப்படையில் 28 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை அறிவிக்கப்பட்டு உள்ளது.
தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: இந்தப் பணிக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை தேர்வர்கள் அனுப்பவேண்டும்.
விண்ணப்பக்கட்டணம்: இந்தப் பணிக்கு விண்ணப்பம் செய்ய ரூ. 177 விண்ணப்பக்கட்டணம் செலுத்தவேண்டும். எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினர் கட்டணம் செலுத்தத் தேவை இல்லை.
கடைசிநாள்: விண்ணப்பங்களை வரும் 7.3.2024-ம் தேதிக்குள் அனுப்பவேண்டும்.
இணையதள முகவரி: கூடுதல் தகவல்களைப் பெற bel-india.in என்ற இணையதள முகவரியைக் கிளிச் செய்து காணலாம்.


Click it and Unblock the Notifications












