நவ ரத்னா அந்தஸ்து பெற்ற, 'பெல்' நிறுவனத்தின் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு, ஆன்லைன் வாயிலாக செப்டம்பர் 7 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என, அந்த நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
'ப்ராஜெக்ட் இன்ஜினியர்', 'ப்ராஜெக்ட் அதிகாரி பணியிடங்களுக்கு தகுதி மற்றும் ஆர்வமுள்ளவர்கள் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம். பணியில் இருக்கும் காலத்தில், மாதம் தொகுப்பூதியமாக 55 ஆயிரம் ரூபாய் வரை பெறுவர். பணி காலத்தில் இதர சலுகையாக கூடுதலாக 12 ஆயிரம் ரூபாயும் பெறுவர்.

நிர்வாகம் : பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனம் (BHARAT ELECTRONICS LIMITED)
மேலாண்மை : மத்திய அரசு
விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்
விண்ணப்பிக்க கடைசி தேதி: 07.09.2023
பணி விவரம்/ பணி எண்ணிக்கை
Ø Project Engineer-I - 17
Ø Project Engineer-I - 04
Ø Project Officer-I - 01
கல்வித் தகுதி
விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிலையத்தில், பணிக்கு ஏற்ற பாடத்திட்டத்தில், கீழே கொடுக்கப்பட்ட கல்வி தகுதியை பெற்றிருக்க வேண்டும்.
Ø Project Engineer-I
B.E./B.Tech/B.Sc Engg. in Mechanical
Ø Project Engineer-I
B.E./B.Tech/B.Sc Engg. in Electrical
Ø Project Officer-I
MBA(HR) / MSW,PGDM (HR)
வயது வரம்பு
விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது 01.09.2023 தேதியின் படி 32க்குள் இருக்க வேண்டும். வயது வரம்பில் வழங்கப்பட்ட தளர்வுகள் குறித்த விரிவான விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
ஊதியம் விவரம்
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில், தொகுப்பூதியம் வழங்கப்படும்.
Project Engineer-I/ Project officer -I
ü 1st year : ரூ.40,000/-
ü 2nd year : ரூ.45,000/-
ü 3rd year: ரூ.50,000/-
ü 4th year: ரூ.55,000/-
கூடுதல் விபரங்களை அறிய கீழே உள்ள அறிவிப்பாணை கிளிக் செய்யவும்.
விண்ணப்ப கட்டணம்
Project Engineer, Project Officer - I
General, EWS and OBC ரூ.472/-
தேர்வு முறை
இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு, எழுத்து தேர்வு அடிப்படையில், தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
நோட் இட் ப்ளீஸ்...!
இந்த பணியிடங்கள் முற்றிலும் தற்காலிக அடிப்படையில் நிரப்படும்.
தேர்வாகும் விண்ணப்பதாரர்கள் தலோஜா, நவி மும்பையில் உள்ள பெல் நிறுவனத்தில் பணி அமர்த்தப்படுவர்.
இந்திய நாட்டை சேர்ந்தவர்கள் மட்டுமே இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்க முடியும்.
பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு காப்பீடு உள்பட இதர சலுகைகளும், அரசு விதிகள், கம்பெனி விதிகளுக்கு உட்பட்டு வழங்கப்படும்.
மறக்காதீங்க...!
ü விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளமான
https://bel-india.in/CareersGridbind.aspx?MId=29&LId=1&subject=1&link=0&issnno=1&name=Recruitment - Advertisements இல் உள்ளே நுழைந்து, தகுதியானவர்கள் 07.09.2023 வரை விண்ணப்பிக்கலாம்.
ü கோரப்பட்ட ஆவணங்களுடன் பரிந்துரைக்கப்பட்ட முறையில் விண்ணப்ப படிவங்கள் இல்லையெனில் நிராகரிக்கப்படும்.
விரிவான தகவல்களுக்கு கீழே கொடுக்கப்பட்ட அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள அறிவிப்பை பார்வையிடவும்.


Click it and Unblock the Notifications












