BEL EAT Post Recruitment 2023: பயிற்சி முடிச்சிட்டீங்கனா ... மாதம் ரூ.90 ஆயிரம் ஊதியத்தில் வேலை...!

நவ ரத்னா அந்தஸ்து பெற்ற, 'பெல்' நிறுவனத்தின் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என, அந்த நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இன்ஜினியரிங் அசிஸ்டென்ட் ட்ரைனிங் பணியிடங்களுக்கு தகுதி மற்றும் ஆர்வமுள்ளவர்கள் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம். பயிற்சியில் இருக்கும் காலத்தில், மாதம் உதவித்தொகை 10 ஆயிரம் ரூபாய் வரை பெறுவர். பயிற்சியை சிறப்பாக முடித்தீர்கள் எனில், நிரந்தர ஊழியருக்கான மாத ஊதியமான 90 ஆயிரம் ரூபாய் ஊதியத்துடன் அனுமதிக்கப்பட்ட சலுகைகளையும் பெறுவர்.

நிர்வாகம் : பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனம் (BHARAT ELECTRONICS LIMITED)

மேலாண்மை : மத்திய அரசு

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்

விண்ணப்பிக்க கடைசி தேதி: 05.09.2023

பணியிடம்: பெங்களூரூ

இன்ஜினியர்களுக்கு வேலை...!

பணி விவரம்/ பணி எண்ணிக்கை

Ø Engineering Assistant Trainee

Ø Technician 'C',

Ø Junior Assistant

கல்வித் தகுதி

விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிலையத்தில், பணிக்கு ஏற்ற பாடத்திட்டத்தில், அறிவிப்பில் கொடுக்கப்பட்ட கல்வி தகுதியை பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு

விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது 01.08.2023 தேதியின் படி 28க்குள் இருக்க வேண்டும். வயது வரம்பில் வழங்கப்பட்ட தளர்வுகள் குறித்த விரிவான விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

ஊதியம் விவரம்

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பயிற்சி காலத்தில் ரூ.10 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும். பயிற்சி காலத்துக்கு பின், நிரந்தர பணிக்கு தேர்வாகும் நபர்கள் ரூ.90 ஆயிரமும், அனுமதிக்கப்பட்ட சிறப்பு சலுகைகளும் பெற தகுதியாவர்.கூடுதல் விபரங்களை அறிய கீழே உள்ள அறிவிப்பாணை கிளிக் செய்யவும்.

விண்ணப்ப கட்டணம்

General, EWS and OBC ரூ.250/- என. விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும். ஜி.எஸ்.டி., 18 சதவீதமும் பிடித்தம் செய்யப்படும்.

தேர்வு முறை

இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு, எழுத்து தேர்வு அடிப்படையில், தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

நோட் இட் ப்ளீஸ்...!

தேர்வாகும் விண்ணப்பதாரர்கள் பெங்களூரூவில் உள்ள பெல் நிறுவனத்தில் பணி அமர்த்தப்படுவர்.

இந்திய நாட்டை சேர்ந்தவர்கள் மட்டுமே இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்க முடியும்.

பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு காப்பீடு உள்பட இதர சலுகைகளும், அரசு விதிகள், கம்பெனி விதிகளுக்கு உட்பட்டு வழங்கப்படும்.

மறக்காதீங்க...!

ü விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளமான

https://bel-india.in/CareersGridbind.aspx?MId=29&LId=1&subject=1&link=0&issnno=1&name=Recruitment - Advertisements

இல் உள்ளே நுழைந்து, தகுதியானவர்கள் 05.09.2023 வரை விண்ணப்பிக்கலாம்.

ü கோரப்பட்ட ஆவணங்களுடன் பரிந்துரைக்கப்பட்ட முறையில் விண்ணப்ப படிவங்கள் இல்லையெனில் நிராகரிக்கப்படும்.

விரிவான தகவல்களுக்கு கீழே கொடுக்கப்பட்ட அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள அறிவிப்பை பார்வையிடவும்.

க்ளிக் ப்ளீஸ்....!.

https://bel-india.in/Default.aspx

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Bharat Electronics Limited (BEL) popularly known as 'BEL' has announced to apply for the vacant posts of Engineering Assistant Training Officer.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+