ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் மத்திய BECIL நிறுவனத்தில் வேலை வேண்டுமா? விண்ணப்பிக்கலாம் வாங்க!

பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ஸ் இந்தியா லிமிடெட் (BECIL) நிறுவனத்தில் காலியாக உள்ள IT Consultant பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ஸ் இந்தியா லிமிடெட் (BECIL) நிறுவனத்தில் காலியாக உள்ள IT Consultant பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பல்வேறு பிரிவுகளில் இப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ள நிலையில் இதற்கு ரூ.50 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் மத்திய BECIL நிறுவனத்தில் வேலை வேண்டுமா? விண்ணப்பிக்கலாம் வாங்க!

மேலாண்மை : மத்திய அரசு

நிர்வாகம் : பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ஸ் இந்தியா லிமிடெட் (BECIL)

பணி : IT Consultant

மொத்த காலிப் பணியிடங்கள் : பல்வேறு பிரிவுகளில் இப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

கல்வித் தகுதி :

Information Technology, Information Science, Computer Science அல்லது Electronics பாடங்களில் பி.இ, பி.டெக், எம்.இ, எம்.டெக் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

IT, CS, Information Science, Electronics பாடங்களில் டிப்ளமோ தேர்ச்சி பெற்று 5 ஆண்டுகள் வரையில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

IT, CS பாடங்களில் எம்.எஸ்சி M.Sc தேர்ச்சி பெற்று குறைந்தது ஒரு வருடம் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

அதோடு, MS Office, Application Testing, Basic Knowledge of Mobile Technologies, Data Analysis, Data Mining மற்றும் Reports பணிகளில் அனுபவம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு : விண்ணப்பதாரர் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.30,000 முதல் அதிகபட்சம் ரூ.50,000 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://www.becil.com/ எனும் இணையதளத்தின் மூலம் 17.10.2021 தேதிக்குள் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைன் விண்ணப்பம் : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பக் கட்டணம் :

  • பொது, ஓபிசி விண்ணப்பதாரர்கள் - ரூ.750
  • எஸ்.சி, எஸ்.டி உள்ளிட்ட விண்ணப்பதாரர்கள் - ரூ.450

தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் தகுதித் திறன், எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.becil.com அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
BECIL Recruitment 2021, Apply online for IT Consultant post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X