மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்திய ஒளிபரப்பு பொறியியல் ஆலோசனை நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உடையோர் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

பணி :
அனுமதிக்கப்பட்ட தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பாகும் பல்வேறு மொழி நிகழ்ச்சிகளில் எந்தெந்த நிகழ்ச்சிகள் கேபில் தொலைக் காட்சி ஒழுங்கு முறைச் சட்டம் 1995-ற்கு எதிராகவும், நிகழ்ச்சிகள் மற்றும் விளம்பர வழிகாட்டுதலை பின்பற்றாமலும் ஒளிபரப்பப்படுகிறதே என்பதைக் கண்காணித்து தெரிவிப்பது மற்றும் இந்திய அரசால் தரப்படும் ஒளிபரப்பு கண்காணிப்பு தொடர்பான வேறு பணிகளையும் மேற்கொள்வது இப்பணியாகும்.
மொத்த பணியிடம் :
தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் தலா 6 காலிப் பணியிடமும், ஆங்கிலத்தில் 2 பணியிடமும் என மொத்தம் 26 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
கல்வித் தகுதி:
இளநிலை பட்டப் படிப்பு முடித்து கணினி புலமையும், மொழிப் புலமையும் பெற்றிருப்பதோடு குறைந்தபட்சம் ஓராண்டு ஊடகத் துறையில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
இதழியல் துறையில் முதுநிலைப் பட்டயப் படிப்பு அல்லது பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
தேர்வு முறை:
திறனறித் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவர்.
ஊதியம் : ரூ. 28,635
விண்ணப்பிக்கும் முறை :
இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உடையோர் www.becil.com என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள விண்ணப்பம் மற்றும் கூடுதல் தகவலை பெற்றுக் கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications












