நீங்கள் டேட்டா அனலிஸ்ட்டா... பிஇசிஐஎல் உங்களை அழைக்கிறது...!!

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் இந்தியா (Broadcast Engineering Consultants India -BECIL) நிறுவனத்தில் காலியாக உள்ள கன்சல்டன்ட் / டேட்டா அனலிஸ்ட் (Consultant / Data Analyst) பணியிடங்களை நிரப்பும் அறிவிப்பு வந்துள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தலாம். கூடுதல் விவரங்களுக்கு https://www.becil.com/vacancies என்ற இணையதள முகவரியைக் கிளிக் செய்து அறியலாம்

பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனம் என்பது ஒரு மத்திய பொதுத்துறை நிறுவனமாகும். இது மினி ரத்னா நிறுவனம். இது 24 மார்ச் 1995-ல் நிறுவப்பட்டது. இது வானொலி மற்றும் தொலைக்காட்சி ஒளிபரப்பு பொறியியல் போன்ற பகுதிகளை உள்ளடக்கியது; இந்தியாவிலும் வெளிநாட்டிலும் உள்ளடக்க தயாரிப்பு வசதிகள், நிலப்பரப்பு ஒளிபரப்பு வசதிகள், செயற்கைக்கோள் மற்றும் கேபிள் ஒளிபரப்பு வசதிகள் ஆகியவற்றில் திட்ட ஆலோசனை சேவைகள் மற்றும் டர்ன்-கீ தீர்வுகளை வழங்குகிறது.

இது ஒளிபரப்பு தொடர்பான வடிவமைப்பு மற்றும் கட்டுமானம், பயிற்சி மற்றும் மனிதவளத்தை வழங்குதல் போன்ற மனித வளம் தொடர்பான செயல்பாடுகள் போன்ற துணை சேவைகளையும் வழங்குகிறது.
பாதுகாப்பு, போலீஸ் மற்றும் துணை ராணுவத் துறைகளுக்கு சிறப்புத் தொடர்பு, கண்காணிப்பு, பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு அமைப்புகளையும் பிஇசிஐஎல் வழங்குகிறது. பிஇசிஐஎல் அதன் தலைமை அலுவலகம் டெல்லியிலும், கார்ப்பரேட் அலுவலகம் நொய்டாவிலும் உள்ளது.

பிஇசிஐஎல் ஒரு ஆலோசனை நிறுவனமாகவும், கணினி ஒருங்கிணைப்பு மற்றும் ஒளிபரப்பு பொறியியல் மற்றும் தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பத் துறையில் ஆயத்த தயாரிப்பு தீர்வு வழங்குநராகவும் செயல்படுகிறது.

நீங்கள் டேட்டா அனலிஸ்ட்டா... பிஇசிஐஎல் உங்களை அழைக்கிறது...!!

இந்த சிறப்பு வாய்ந்த மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் இந்தியா (Broadcast Engineering Consultants India -BECIL) நிறுவனத்தில்தான் தற்போது கன்சல்டன்ட் / டேட்டா அனலிஸ்ட் (Consultant / Data Analyst) பணியிடங்கள் காலியாக உள்ளன.

கன்சல்டன்ட் / டேட்டா அனலிஸ்ட் பணியிடங்களுக்கான கல்வித்தகுதி:

கன்சல்டன்ட் / டேட்டா அனலிஸ்ட் பணியிடங்களுக்கு அரசு அல்லது யுஜிசி (UGC) சார்ந்த கல்வி வாரியங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் பி.இ., பி.டெக், எம்.ஏ., எம்.எஸ்சி(BE, B.Tech, MA, M.Sc ) ஆகிய பட்டப்படிப்புகளில் ஏதேனும் ஒன்றை முடித்தவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகின்றன.

கன்சல்டன்ட் / டேட்டா அனலிஸ்ட் பணியிடங்களுக்கு வயதுத்தகுதி:

இந்த கன்சல்டன்ட் / டேட்டா அனலிஸ்ட் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் 21 வயது முதல் 35 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

கன்சல்டன்ட் / டேட்டா அனலிஸ்ட் பணியிடங்களுக்கு மாத சம்பளம்:

கன்சல்டன்ட் / டேட்டா அனலிஸ்ட் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் ரூ.59,000/- மாத சம்பளமாக பெறுவர்.

தேர்வு செய்யும் முறை:

இந்த பிஇசிஐஎல்(BECIL) நிறுவன பணிக்கு பொருத்தமான நபர்கள் ஸ்கில் தேர்வு, நேர்முகத் தேர்வு, இன்டர்ஆக்சன் (Skill Test, Interview, Interaction) தேர்வு ஆகியவற்றின் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

விண்ணப்பிக்கும் வழிமுறை:

கன்சல்டன்ட் / டேட்டா அனலிஸ்ட் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் 5.1.2024 என்ற இறுதி நாளுக்குள் கீழே தரப்பட்டுள்ள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம்.

வேலையிடம் தொடர்பான விளம்பர அறிவிப்புக்கு
https://www.becil.com/uploads/vacancy/415ECI22dec23pdf-5ea440b46e419130cc76d8fb5cf66f29.pdf என்ற இணையதள லிங்க்கைக் கிளிக் செய்து காணலாம்.

கூடுதல் விவரங்களுக்கு

https://www.becil.com/vacancies என்ற இணையதள முகவரியைக் கிளிக் செய்து அறியலாம்

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Broadcast Engineering Consultants India Limited (BECIL) has recently sought a job notification for the recruitment of a Consultant/ Data Analyst Vacancy. Interested candidates can apply before the last date. Check more details on the Broadcast Engineering Consultants India Limited (BECIL) job vacancy 2023.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+