மத்திய அரசிற்கு உட்பட்ட பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் (BARC) காலியாக உள்ள Technician - B, Scientific Assistant-B பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 3 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.19 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : பாபா அணு ஆராய்ச்சி மையம் (BARC)
மேலாண்மை : மத்திய அரசு
மொத்த காலிப் பணியிடங்கள் : 03
பணி : Technician/B and Scientific Assistant/B உள்ளிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
கல்வித் தகுதி :
- Scientific Assistant-B - B.Sc தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
- Technician-B - 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பதோடு, பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
- விண்ணப்பதாரர் 50 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
- அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
ஊதியம் : ரூ.11,730 முதல் ரூ.19,502 வரையில்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு :
- Technician-B - இங்கே கிளிக் செய்யவும்.
- Scientific Assistant/ B - இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் http://www.barc.gov.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள முகவரிக்கு தங்களது விண்ணப்பப் படிவம் கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 11.06.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://www.barc.gov.in/ அல்லது மேலே குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை காணவும்.


Click it and Unblock the Notifications












