பாபா அடாமிக் ரிசர்ச் சென்டர் என்று அழைக்கப்படும் பிஏஆர்சி (BARC) மருத்துவமனையில் காலியாக உள்ள ரெசிடெண்ட் மெடிக்கல் ஆபீஸர், ஜூனியர், சீனியர் ரெசிடென்ட் டாக்டர் (Resident Medical Officer, Junior/Senior Resident Doctor & Resident Medical Officer (ICCU/Med) பணியிடங்கள் காலியாக உள்ளன. தகுதியும், ஆர்வமும் உள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
கூடுதல் விவரங்களுக்கு https://www.barc.gov.in/careers/vacancy24.pdf என்ற இணையதள முகவரியைக் கிளிக் செய்து அறியலாம்.
பாபா அணு ஆராய்ச்சி மையம் (Bhabha Atomic Research Centre) இந்தியாவில் மிகவும் புகழ் பெற்ற ஒரு அணு ஆராய்ச்சி நிலையமாக விளங்கி வருகிறது. இது மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் அமைந்துள்ளது. இந்தியாவின் முதன்மையான அணுசக்தி ஆராய்ச்சி நிலையமாக இதனை இந்தியாவின் புகழ் பெற்ற அறிவியல் வல்லுனரான ஹோமி பாபா அவர்கள் தலைமையில் செயல்படுத்தியதாகும்.

இங்கு பல வகையான அணு சக்தியை சாதகமான வழிகளில் பயன்படுத்துவதற்கான அணு உலைகள் செயல்பாட்டில் உள்ளன. இவை அனைத்தும் உயர்தர ஆராய்ச்சிக்காகவே உருவாக்கியவை ஆகும்.
பாபா அணு ஆராய்ச்சி மையம் ஒரு பன்முக சேவையாற்றி வரும் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனம்.
ந்நிறுவனம் அணுக்கரு எரிபொருள் சுழற்சி, தற்கால மற்றும் எதிர்காலத்தில் தேவைப்படும் நவீன அணுக்கரு ஆற்றல் அமைப்புகள், தொழிற்சாலைகளுக்குத் தேவையான மின்னாற்றல் சாராத அணுக்கரு ஆற்றல், வேளாண்மை, சுகாதாரம் என ஒவ்வொரு துறையிலும் நாட்டை வலிமைப்படுத்துவதையே முக்கிய குறிக்கோளாகக் கொண்டு செயலாற்றி வருகிறது.
மேலும் ரோபோடிக்ஸ், சூப்பர்- கணினிகள், லேசர்கள், முடுக்கிகள், மனித மரபணுக்கள், நானோ-தொழில்நுட்பம் மற்றும் உயர் கடத்திகள் போன்ற அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சித் திட்டங்களில் சிறப்புடன் செயலாற்றி வருகிறது. அடிப்படை அறிவியலின் முக்கியம் வாய்ந்த பல துறைகளில் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த அணுசக்தி ஆராய்ச்சி மையம் சார்பில்தான் பிஏஆர்சி மருத்துவமனை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த சிறப்புவாய்ந்த மருத்துவமனையில் தற்போது டாக்டர் பணியிடங்களுக்கான வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனை அணுசக்தித் துறையின் ஊழியர்களின் மருத்துவத் தேவைகளைப் பூர்த்தி செய்ய இயங்கி வருகிறது. இந்த மத்திய அரசு பணிக்கு என தற்போது 41 பணியிடங்கள் காலியாக உள்ளன.
கல்வி தகுதி:
இந்த ரெசிடெண்ட் மெடிக்கல் ஆபீஸர், ஜூனியர், சீனியர் ரெசிடென்ட் டாக்டர் (Resident Medical Officer - MS/MD/DNB degree or Diploma, Junior/Senior Resident Doctor - MBBS, Resident Medical Officer (ICCU/Med.) - MBBS) பணியிடங்களுக்கு கல்வித்தகுதியாக எம்பிபிஎஸ், எம்எஸ்,எம்டி, பட்டப்படிப்பை படித்து முடித்திருக்கவேண்டும்.
வயதுத்தகுதி:
விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வம் உள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 40க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் டாக்டர்கள் தெரிந்துகொள்ளலாம்.
தேர்வு முறை:
இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
ஊதிய விவரம்:
ரெசிடென்ட் டாக்டர் ( Resident Medical Officer) பணிக்கு, ரூ.86,000/-ம், ஜூனியர், சீனியர் ரெசிடெண்ட் டாக்டர் பணிக்கு (Junior/Senior Resident Doctor) ரூ.72,000/- to ரூ. 74,000/-ம், ரெசிடெண்ட் மெடிக்கல் ஆபீஸர் பணிக்கு (Resident Medical Officer (ICCU/Med.) ரூ.76,000/-ம் ஊதியம் வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
பாபா அணு ஆராய்ச்சி மைய மருத்துவமனையில் டாக்டர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் தங்களின் முழு விவரம் அடங்கிய விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து வரும் 21.12.2023 அன்று நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டும்.
கூடுதல் விவரங்களுக்கு https://www.barc.gov.in/careers/vacancy24.pdf என்ற இணையதள முகவரியைக் கிளிக் செய்து அறியலாம்.


Click it and Unblock the Notifications












