பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பாங்க் ஆப் மகாராஷ்டிரா வங்கியில் காலியாக உள்ள சிறப்பு அதிகாரி, பொது அதிகாரி உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : பாங்க் ஆப் மகாராஷ்டிரா வங்கி
மொத்த காலிப் பணியிடங்கள் : 350
சிறப்பு அதிகாரி பணியிடங்களில் மொத்தம் 50 காலிப் பணியிடங்களும், பொது அதிகாரி பணியிடத்தில் மொத்தம் 300 பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளது. துறைவாரியான காலிப் பணியிட விபரங்கள் பின்வருமாறு
சிறப்பு அதிகாரி பணியிட விபரங்கள்:
- Network & Security Administrators - 11
- Database Administrator (MSSQL / Oracle) - 04
- System Administrator (Windows/VM) - 14
- System Administrator (UNIX)- 07
- Production Support Engineer - 07
- E-Mail Administrator - 02
- Business Analyst - 05
கல்வித் தகுதி : பொறியியல் துறையில் தொடர்புடையப் பிரிவில் பி.இ. அல்லது பி.டெக் முடித்தவர்கள் சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு : 01.03.2019 தேதியின்படி விண்ணப்பதாரர் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் : மாதம் ரூ.31,705 முதல் ரூ.45,950 வரையில்
பொது அதிகாரி பணியிட விபரங்கள்:
மொத்த காலியிடங்கள் : 300
பணி : Generalist Officer Scale II - 200
வயது வரம்பு : 01.04.2019 தேதியின்படி 20 முதல் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் : மாதம் ரூ.31,705 முதல் ரூ.45,950 வரையில்
பணி : Generalist Officer Scale III - 100
வயது வரம்பு : 20 முதல் 28 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் : மாதம் ரூ.42,020 முதல் ரூ.51,490 வரையில்
கல்வித் தகுதி : ஏதேனும் ஓர் துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றிருப்பவர்கள், எம்பிஏ (நிதி), சிஏ, ஐசிடபுள்யூஏ, சிஎஃப்ஏ, எஃப்ஆர்எம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு முறை : மேற்கண்ட பணியிடங்களுக்கு ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
சிறப்பு அதிகாரி பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிய இங்கே கிளிக் செய்யவும்.
பொது அதிகாரி பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிய இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பக் கட்டணம் : எஸ்சி, எஸ்டி விண்ணப்பதாரர்கள் ரூ.118 செலுத்த வேண்டும். மற்ற பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் ரூ.1180 கட்டணமாக செலுத்த வேண்டும். மாற்றுத்த திறனாளி பிரிவினர் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை : தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://www.bankofmaharashtra.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 31.12.2019 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.